கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான பத்மநாபபுரம் அரண்மனையை மிக அருமையான ஒரு அரண்மனை . கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான அரண்மனை. 1798 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மணை டிரவண்கோர் ஆட்சியாளர்களின் தலை நகரமாக இருந்தது.

இந்த அரண்மனை 1601 ஆம் ஆண்டு இரவிப்பிள்ளை இரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. மந்திர சாலை, தை கொட்டாரம், நாடக சாலை, நான்கு மாடி கட்டிடம், தெற்கு கொட்டாரம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அரசவையே மந்திர சாலை என்று அழைக்கப்பட்டது.மந்திர சாலையின் ஜன்னல்கள் அழகிய வண்ணமயமான மைகாவால் கட்டப்பட்டது. மைகா வெயிலின் அளவை குறைக்கிறது. தரை தேங்காய் மூடிகளாலும், முட்டைகளாலும் ஆனது. தமிழகத்தில் இருந்தாலும் அரண்மனை கேரள கட்டிடக் கலையின் பாணியிலே அமைக்கப்பட்டுள்ளது.

தை கொட்டாரம் பழமையான கட்டிடம் என்றே சொல்லப்படுகிறது. இந்த கொட்டாரத்தில் நாலுகட்டு, ஏகாந்த மண்டபம் போன்ற அமைப்புகளும் உள்ளன. சில தூண்கள் ஒரே பலா மரத்தால் மிகுந்த கலை வேலைப்பாட்டுடன பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கிறது. தெற்கு கொட்டாரம் 400 ஆண்டுகள் பழமையானது. இப்போது அருங்காட்சியமாக காணப்படுகிறது. நான்கு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது மாடி உப்பரிக்க மளிகா என்றழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்



திறந்திருக்கும் நேரம்: 9.00 am - 1.00 pm , 2.00 pm - 4.30 pm
திங்கட்கிழமைகளில் செயல்படாது
 
Top