0
மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடி யாத ஓர் அம்சமாகி விட்டது. எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்ப டவே செய் கின்றன.
அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட் டதா இல்லையா என்ற சந்தேகமாகும். அதனை தெரிந்து கொள் வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறை களைக் கொண்ட வழிமுறை இதுவாகும்.
1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளு ங்கள்.
2. நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சலை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் http://www.spypig.com/ தளத்தி ற்கு செல்லுங்கள்.
அத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் கீழ்க் கண்டவற்றை பின்பற்றவும்.


1. உங்கள் மின்னஞ்சல் முகவரி.
2. உங்கள் செய்தியின் தலைப்பு.
3. தரப்பட்டுள்ள உருவங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. படிமுறை 4ல் காட்டப்பட்டுள்ள பட்டனை அழுத்தவும். இப்பொழுது கீழுள்ள வெற்றிடத்தில் அவ்வுருவம் தோன்றும்.
5. அவ்வுருவத்தினை உடனடியாக கொப்பி செய்து உங்கள் மின் னஞ்சல் செய்தியினுள் பேஸ்ட் செய்யுங்கள். (60 விநாடிகளுக் குள்)
6. இதன் பின்னர் வழமை போல மின்னஞ்சலை அனுப்பவும். நீங் கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டவுடன் மேலே காட்டப் பட்டுள்ளதைப் போன்ற மின்னஞ்சலொன்று உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படும். (சில வேளைகளில் இம்மின்னஞ்சல் உங்கள் கண க்கின் Spam folder இல் காணப்படலாம்).
இதில் பெறுவரின் I.P.முகவரி, எப்பொழுது படிக்கப்பட்டது, எத்த னை முறை படிக்கப்பட்டது, எந்த இடத்தில் படிக்கப்பட்டது, குறி த்த நபரால் பாவிக்கப்படும் உலாவி, கணணியின் இயக்குதளம் போன்ற தகவல்களும் தரப்படும்.

கருத்துரையிடுக Disqus

 
Top