0
 
தம் ஒரே குழந்தையின் மேல் பேரன்பு கொண்டிருந்த பெற்றோர்கள் அவர்கள். ஒரு நாள் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை இறந்து விடுகிறாள். பெற்றோருக்கோ உலகமே இருண்டு போனதுபோல் ஆகிறது.வந்த உறவினர்கள் ஆறுதல் சொல்லி திரும்பிப்போய்விட்டார்கள். நாட்கள் நகர்கின்றன.ஆனால் அந்தப் பெற்றோரின் அழுகை கொஞ்சமும் குறைந்த பாடில்லை.

ஒரு நாள் அந்த தந்தையின் நினைவு தப்பி, வேறு ஒரு வெளிதனில் பிரவேசிக்க, அங்கே நூற்றுக்கணக்கில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன, இன்னும் சற்று உற்று நோக்குகையில் தங்கள் குழந்தையும் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதை அந்த தந்தை கண்டார்.

சற்று நேரத்தில் இருள் சூழத்துவங்க, அந்தக்குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி நகரத்துவங்கினர்.

அதன்படியே இவர்களது குழந்தையும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயல அது தொடர்ந்து அணைந்துகொண்டே இருந்தது.

தந்தைக்கோ ஆற்றமாட்டாத ஆதங்கம். மகளிடம் கேட்கிறார்,’மகளே மற்ற பிள்ளைகளெல்லாம் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு, தங்கள் இருப்பிடம் நோக்கி சென்று விட்டார்கள். உனக்கு மட்டும் ஏன் அது அணைந்து அணைந்து போகிறது?

அதற்கு அந்த மகள் சொன்னாள்,’’ அப்பா மற்றவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக போதுமான அளவுக்கு அழுதுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்க போய்விட்டார்கள்.ஆனால் நீங்களும் அம்மாவும் பலநாட்களாகியும் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறீர்கள்.









உங்கள் கண்ணீர்தான் தொடர்ந்து என் மெழுகுவர்த்தியை அணைத்துக்கொண்டே இருக்கிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top