எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந் தோலோ,
அதிகப்படி யான வேலையை செய் யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படு கிறது. உடல்
உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால்
கண்களுக் கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில் லை.
ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டி ருப்பதால் கண் பாதிக்கப் படுகிறது. கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.
கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல் லாமல், மனதின் சிந்தனை யை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கண்களுக்கு ஓய்வ ளிக்க
பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம்
உள் ளது. சிரசாசனம் செய்வதால் கண் களின் பார் வை அதிகரிக்கும்.
மேலும்,
கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதா வது, ஒரு இருளான
அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால்
கண்களுக்கு அதிக மான சக்திக் கிடை க்கும். சூரியநமஸ்காரம் செய்வதாலும்
கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட் பார்கள்.
எனவே
சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக
சூரியநமஸ்காரத்தை அதி காலையில் சூரியன் உதயத் திற்கு முன்பாக செய்ய
வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு
பலன்கள் கிட்டும்.
முக்கியமான
விஷயம் என்ன வென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும்.
அதுவும் மிகவும் இருளான ஒரு அறை யில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல
ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிக வும் நல்லது.
அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும்
புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணி யாற்றிக் கொண் டிருக்கும்
போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப் படும்போது, உள்ளங்கைகள்
இரண்டையும், நமது கண் களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்
ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அப்படி
செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம்
கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.
அதாவது,
ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்
ணெயை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கை களையும் கண்களில் அழுத்
தும்போது உங்களது கண் களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர
கிடைக்கும்.
புருவம்
என்பது, கண்க ளுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத் திருக்க அமைக்
கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவ ங்களின் சூட்டினால் தான் கண்களின்
குவிய ங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்
தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.
எனவே
அந்த வெப்பத் தைக் குறைக்க புருவங் களில் எண்ணெய் வைப் பது கண்களுக்கு
குளிர்ச்சி யை அளிக்கும். பொதுவாக கண் களுக்கு ஓய்வு என் றால், எதையும்
உற்று அல் லது கூர்ந்து பார்க் காமல் இருந்தாலேப் போ தும். அதாவது
சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு
பாதிப்பு ஏற்படுகிறது.
சிறிது
நேரம் எந்தப் பொரு ளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்
காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான். அதேப் போல மதியம் உணவு இடைவே ளையின்
போது சாப்பிட்டு விட்டு உடனடி யாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின்
ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி
இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.
கருத்துரையிடுக Facebook Disqus