கெட்டுப்போகாமல்பாதுகாக்கிறேன் பேர்வழி என்று குளிர்பதன பெட்டி யில்வைக்கக்கூடாத பொருட்களை கூட உள்ளே அடைத்து திணித்துவிடுவார்கள். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது.

குளிர்பானங்கள், வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்தரசம், புளித்துபோன இட்லிமாவு எனசகலத்தையும் உள்ளேவைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள்.

ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் அட்வைஸ் என்ன வென்றால் காய் கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லிமாவு போன்றவற்றை வாரகணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடியவரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கிறார்கள்.

குறிப்பாக இறைச்சியை பிரிட்ஜில்வைத்து பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களது அட்வைஸ்!

கூடிய வரை இறைச்சியை உடனடியாக வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால் தான் அதில் உள்ள புரதசத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல்வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரதச்சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அதுவிஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

நீண்ட நாட்கள்ஃபிரிட்ஜில் வைத்திருக்கு மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும். அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும்.

இது போன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பைதொடர்பான நோய்கள் ஏற்படுவதோடுமட்டுமல்லாது, ஈரல், சிறுநீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டைபாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஈரல் தொடர்பான நோய்மஞ்சள்காமாலையை ஏற்படுத்திவிடலாம். அதேபோன்று நோய் தாக்கிய ஆடு,மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் இழந்திருக்க லாம். அப்படியான ஒருநிலையில், இத்தகைய இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து உண்பதினால் ஒருபயனும் இருக்கப்போவதில்லை. நோய் தான் வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவுவிடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!
 
Top