0
இன்றைய அவசர உலகில் மக்கள் உடற்பயிற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகமிக குறைவு என்றே சொல்லவேண்டும். இயந்திரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனித இனம் உடற்பயிற்சியை மறந்து புதிய புதிய நோய்களுக்கு ஆளாகி இறக்கவும் நேரிடுவது அதிகரித்துள்ளது. எனவே உடற்பயிற்சி என்பது எமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சியின் மூலம் பல நோய்கள் தீருவதாகவும் தினமும் 10- 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி அவசியம் எனவும் ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நீங்கள் வீட்டிலிருந்தேனும் சிறிது நேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் அல்லவா? ஆம் அதற்காகவே ஒரு தளம் இருக்கிறது ஆங்கிலத்தில். எந்தெந்த உடற்பயிற்சிகளை எப்படி செய்ய வேண்டும் என்கின்ற விளக்கங்களோடு காணொளியுடனும் பல காணப்படுகிறது. தினம் ஒரு தளம் பகுதியில் நாம் இன்று அறிமுகம் செய்யும் தளம் இத்தளமே. தளத்திற்கு செல்லுங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நாளை மற்றும் ஒரு புதுமையான தளத்துடன் சந்திப்போம்.

Click:- http://www.crossfit.com/

இதைவிட கழுத்த இடுப்பு வலிகளுக்கான உடற்பயிற்சி முறைகளை யும் சொல்லித்தருகிறது ஒரு தளம். அத்தளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.necksolutions.com/

http://puthiyaulakam.com/

கருத்துரையிடுக Disqus

 
Top