0

நாம் பலரும் அறிமுகமாகும் பல மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்வதோடு சரி. சில மென்பொருட்களை நாம் அதிகபட்சம் இரண்டு, மூன்று முறைதான் உபயோகித்திருப்போம். ஒரு குறிப்பிட்ட மென்பொருட்ளின் அனைத்து வசதிகளையும் நாம் அறிந்துவைத்திருப்பது அபூர்வமே. அது போன்று நாம் அறிந்தும் பயன்படுத்தாத ஒரு மென்பொருளின் அட்டகாசமான வசதியினை இன்று காணலாம்.

கம்பிரஸ்ஸன் மென்பொருட்கள் ஒவ்வொன்றும் தனக்கென்று தனி ஃபார்மட்களை உருவாக்கி அதனை பயன்படுத்தவைக்கின்றனர்.
உதாரணத்திற்கு winrarன் .rar ஃபார்மட் kgb archiverன் .kgb ஃபார்மட் ஆகியவற்றை கூறலாம். இவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஃபார்மட்கள் அந்த்தந்த மென்பொருட்களின் துணையுடன் தான் திறக்க, கையாள முடியும். ஆகவே நாம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மென்பொருட்களை நிறுவிக்கொள்வது என்பது நேரத்தை வீணடிக்கும் செயல். எனவே universal extractor என்ற மென்பொருளை நிறுவிக்கொண்டால் எந்த ஒரு ஆர்ச்சிவ் ஃபார்மட்டையும் பிரித்துக்கொள்ளலாம். .uha, .arc, .zip, .rar .iso மற்றும் பல ஃபார்மட்களை இது ஆதரிக்கிறது. இது பலருக்கும் தெரிந்த்ததுதான். இது அனைவரிடமும் இருக்கவேண்டிய பயனுள்ள இலவச மென்பொருள்.

இதனை இங்கிருந்து தரவிறக்கி கொள்ளவும்.

http://www.legroom.net/software/uniextract

இதன் வசதிகள் உண்மையிலேயே உங்களை ஆச்சரியபடுத்தும். இதனை கொண்டு executable fileகளை கூட திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்கமுடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top