0
திரை அளவு: இந்த அளவானது திரையின் குறுக்காக ஒரு முனையிலிருந்து மற்றொரு
முனை வரை உள்ள நீளம். பொதுவாக அங்குல அளவிலேயே இது சொல்லப்படுகிறது.
எல்.சி.டி. டெலிவிஷன் 15 முதல் 52, பிளாஸ்மா மற்றும் புரஜக்ஷன் டிவிக்கள்
37 முதல் 70 மற்றும் வழக்கமான சி.ஆர்.டி. டிவிக்கள் 14 முதல் 34 அங்குல
அளவிலும் இந்தியாவில் கிடைக்கின்றன.

பிளாக் ஸ்ட்ரெட்ச்:

டிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித
தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி
காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக
வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடுத்து அமையும் போது கருப்பு அதன்
தன்மையிலிருந்து சிறிது குறைவாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று
வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.

பி.ஐ.பி.:

பிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள்
கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய
கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப்
பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய
திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு
வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.

ஷார்ப்னெஸ் கண்ட்ரோல்:

படக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம் பெறலாம். ரிமோட்
கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில்
படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்களை எரிச்சல் அடையச்
செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும்
ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப்னெஸ்
கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.

ரெசல்யூசன்:

திரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது.
எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம்
மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array)
640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x
768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட்
எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980
x1080.


பிரைட்னெஸ் சென்சார்:

அறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை
மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ:

பிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.

ஆஸ்பெக்ட் ரேஷியா:

காட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த விகிதம். வழக்கமான
டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3
பங்கு உயரம். அகலத்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.

கோம்ப் பில்டர்:

வண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில்
நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள்
தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும்.


பி.எம்.பி.ஓ:

பீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music
Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர
முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு
மகிழ 30 வாட்ஸ் போதுமானது.

ஸ்டீரியோ பிளே பேக்:

டிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை
மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி
ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.

ரெஸ்பான்ஸ் டைம்:

டிவியின் திரை ஒரு கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக
லட்சத்தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல்
கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால
அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம்
கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால்
காட்சி சிதறும்

கருத்துரையிடுக Disqus

 
Top