இதுவும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் ம்தம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியா திரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவெனில் அவை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர் தூரம் கடலை கடக்கின்றன.
இவை 3 ஆயிரத்து 200 அடி உடரத்தில் பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டாந்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இதில்சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நாம் சின்னவயதில் சாதரனமாக நினைத்து அடித்து துன்புறுத்திய ஒரு தட்டானுக்கு இப்படி ஒரு திறமை..
கருத்துரையிடுக Facebook Disqus