0
உங்கள் மடிக்கணினியின் கீபோர்ட்டில் LED Signal இல்லையா? notebooks, netbooks and cordless keyboards என்பவற்றில் LED Signal இல்லையாயின் கீபோர்ட் கையாள்வது கடினமான ஒன்று.பொதுவாக Caps Lock, and Num Lock, Scroll Lock என்பவற்றுக்கான LED Signal நமது கீபோர்ட்டில் இருப்பது வழமை. ஆனால் அவற்றில் எதாவது ஒன்று இல்லாவிட்டாலும் கீபோர்ட் கையாள்வது பெருஞசிரமம். இந்த சிரமத்தை போக்க ஒரு மிகச்சிறிய இலவச மென்பொருள் உதவுகிறது. இம்மென் பொருளின் பயனர் இடைமுகத்தை கீழுள்ள படத்தில் பாருங்கள்.

படத்தில் அம்புக்குறிகளாலும் வட்டத்தாலும் காட்டப்பட்ட பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். இம்மென் பொருளை தரவிறக்கி நிறுவிய பின்பு உங்கள் system tray ல் சிறிய icon ஒன்று தோன்றும். அதில் தோன்றும் LED Signal களை கொண்டு உங்கள் கீபோர்ட்டில் Caps Lock, and Num Lock, Scroll Lock என்பவற்றின் நிலையை சுலபமாக அறியமுடியும்.அத்துடன் LED Signal களின் நிறங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றவும் முடியும்.உங்பள் கணினி பூட் ஆகும்போதே இம்மென்பொருளை இயங்கவும் செய்யமுடியும்.தரவிறக்க இங்கே http://www.freedownloadscenter.com/Utilities/Mouse_and_Keyboard_Utilities/Keyboard_Leds_Download.html செல்லுங்கள்

கருத்துரையிடுக Disqus

 
Top