0

நீங்கள் உங்களுடைய கணணியை விட்டு தூர விலகிச்செல்ல நேர்ந்தால், அத்தருணத்தில் கணணியை யாராவது தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு. இதனை Predator மென்பொருள் மூலம் தடுக்கலாம். predator ஆனது உங்கள் pen drive ஐ ஒரு திறவுகோலாக பயன்படுத்தி கணணியை பாதுகாக்கிறது.

Predator ஐ பயன்படுத்தும் முறை :

முதலில் USB drive ஐ கணணியில் செருகவும்.

பின்னர் Predator மென்பொருளை நிறுவுங்கள். நிறுவியதும் கீழே படத்தில் காட்டியவாறு ஒரு மெசேஜ் விண்டோ தோன்றும். அதில் ok பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள்.


இப்போது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். அதில் New Password என்ற இடத்தில் உங்களுடைய புதிய கடவுச்சொல்லை அமைக்கவும்.


பின்னர் Create Key On Drive என்ற இடத்தில் உங்களுடைய pendrive இற்கான எழுத்து காட்டப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும். இல்லையெனில் dropdown list இல் இருந்து சரியான எழுத்தை தெரிவு செய்யுங்கள்.

இறுதியாக Create Key பட்டனையும் பின்னர் ok பட்டனையும் கிளிக் செய்யுங்கள்.

இப்போது desktop இல் உள்ள predator icon ஐ டபுள் கிளிக் செய்ததும் predator இயங்கத்தொடங்கும்.

predator இயங்கும் போது taskbar இல் அதன் icon ஆனது பச்சை நிறத்தில் காணப்படும்.

இப்போது வழக்கம் போல் கணணியில் உங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.

வேறு ஏதாவது வேலை காரணமாக நீங்கள் கணணியை விட்டு தூர விலகி செல்ல நேரும் பட்சத்தில் USB drive ஐ கணணியிலிருந்து நீக்கி உங்களுடன் எடுத்து சென்று விடுங்கள். USB drive ஐ நீக்கியவுடன் Keyboard மற்றும் mouse முடக்கப்படும். மேலும் திரை மறைக்கப்பட்டு கருமையாக காட்சி அளிக்கும்.

மீண்டும் உங்கள் கணணிக்கு திரும்பியவுடன் அந்த USB drive ஐ கணணியில் செருகியதும் Keyboard மற்றும் mouse ஆனது செயல்படுத்தப்படுவதுடன் திரையும் பழைய நிலைக்கு மீட்கப்படும்.


Predator இன் அம்சங்கள் :

Predator ஆனது இலவச பதிப்பாகவும் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்முறை(Professional) பதிப்பாகவும் கிடைக்கிறது.

Predator ஆல் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும்.

Predator ஆனது பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒரு log file இல் பதிவு செய்கிறது. நீங்கள் கணணியை விட்டு தூர விலகி இருக்கும் தருணத்தில் மூன்றாம் நபர் யாரவது உங்கள் கணணியை பயன்படுத்த முயற்சித்திருந்தால் இந்த log file ஐ படிப்பதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம்.

Predator ஆனது உங்கள் USB டிரைவில் பாதுகாப்பு குறியீடுகளை(security codes) அடிக்கடி மாற்றுகிறது.உங்கள் டிரைவ் ஐ உங்களுக்கு தெரியாமல் யாரும் நகலெடுக்க நினைத்தால், பாவம் அவர்கள். அந்த நகல் வேலை செய்யாது. ஏனெனில் இதற்கிடையில் உங்கள் டிரைவில் உள்ள குறியீடுகள்(codes) மாற்றப்பட்டிருக்கும்.

USB drive ஐ கணணியில் இருந்து நீக்கியதும் Windows task manager இன் செயற்பாட்டை Predator முடக்குகின்றது. ஆகையால் Predator இன் செயற்பாட்டை Ctrl-Alt-Del ஐ பயன்படுத்தி நிறுத்த முடியாது.

Predator ஆனது விண்டோஸ் இயங்குதளத்தின் CD Autorun வசதியை முடக்குகிறது. ஆகையால் சிறப்புருவாக்கம் செய்யப்பட்ட Malware Cd களை பயன்படுத்தி உங்கள் கணணிக்குள் பிறர் நுழைவது தடுக்கப்படுகிறது.

நீங்கள் உங்களுடைய USB டிரைவ் ஐ இழக்க நேரிட்டால் உங்களுடைய கணணியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் வசதி Predator இல் உள்ளது. நீங்கள் முதல் முறையாக Predator ஐ இயக்கும் போது கடவுச்சொல்லை அமைக்கவும். USB டிரைவ் இல்லாத தருணத்தில் கணணியை மீள இயக்குவதற்கு இந்த கடவுச்சொல் உதவும்.

யாராவது ஒருவர் தவறான கடவுச்சொல்லை பயன்படுத்தி கணணியினுள் நுழைய முயற்சி செய்தால் Predator எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

Predator ஆல் பல கணணிகளை ஒரே USB flash drive ஐ பயன்படுத்தி பாதுகாக்க முடியும். உதாரணமாக உங்கள் வீடு மற்றும் அலுவலக கணணிகளை குறிப்படலாம்.

லிங்க்
http://www.predator-usb.com/predator/en/index.php?n=Main.DownloadFree

கருத்துரையிடுக Disqus

 
Top