0

     3G என்பது 3 வது தலைமுறையினர் என்பதை குறிப்பதாகும். அதாவது 3 ம் தலைமுறையினருக்கான அதிநவீன வசதிகளை அளிக்கும் தொலை தொடர்பு சேவை என்பதாகும். இந்தியாவில் 3 G சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பயனில் உள்ளது. ஆனால், உலகில் முதல் முறையாக கடந்த 2001 ம் ஆண்டே ஜப்பானில் 3G சேவை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2002 ல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த சேவை வழங்கப்பட்டது. தற்போது பழ நாடுகளில் 3G சேவை கடந்தாண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
   இந்தியாவில் 3 G சேவையை வழங்கும் உரிமம் முதலில் BSNL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் ஏலம் மூலம் 3G அலைவரிசைக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன. ஏலம எடுத்த நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தான் 3G வசதியை வழங்கியுள்ளது. நாம் தற்போது 3G சேவையில் நுழைந்து இருக்கும் காலகட்டத்தில் அமேரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் 4G சேவை வழங்கப்பட உள்ளது. 2013 ம் ஆண்டுக்குள் அந்த நாடுகளில் 5G சேவையும் வளம்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

   5G சேவையில் INTERNET SPEED நொடிக்கு 5 ஜிகா பைட்ஸ் ஆகும். அதாவது 600 மெகா பைட்ஸ் (சுமார் ஒரு திரைப்படத்தின் முழு அளவு) கொண்ட ஒரு திரைப்படத்தை ஒரு நிமிடத்தில் செல்போனில் டவுன்லோட் செய்து விடலாம். இந்த 5G சேவை கிடைக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கக் போறோமோ? இப்பதானே 3G யில் காலடி வைத்துள்ளோம்.
 ஹி....ஹி.... 3G லயே நாட்டுல இம்புட்டு பிரச்சனை நடக்குது... இன்னும் 5G வந்தா????

கருத்துரையிடுக Disqus

 
Top