0
தேவையில்லாமல் கடன் வாங்குவது
இன்றைய உலகத்துல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பணத்தை கடனாக அள்ளிக் கொடுக்க ரெடியா இருக்கு. யாராவது கடன் வாங்கமாட்டாங்களான்னு பார்த்துகிட்டே இருக்காங்க? உங்களுக்கே நிறைய வங்கிகளில் இருந்து கால்ஸ் வந்திருக்கும். சார்.. ஜீரோ வட்டிதான்.. கடன்வாங்கலாமே சார்னு கேப்பாங்க...ஒரு சிலருக்கு கடன் வாங்குற பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சா போது... வளைச்சுப் போட்டு அமுக்கிடுவாங்க... ஜீரோ வட்டி, குறைவான வட்டி, வட்டி இல்லாமல் கார் லோன், ப்ரீயா இன்சூரன்ஸ், டெபிட் கார்டுன்னு சொல்லி சொல்லியே கடன் வாங்க வெச்சுருவாங்க.. அப்புறம் மாதந்தோறும் கணிசமான ஒரு தொகையை நீங்கதான் இழக்க வேண்டியிருக்கும்... அப்புறம் கடனுக்கு ஒரு தொகை, கிரெடிட் கார்டுக்கு ஒரு தொகை, கட்ட முடியாம போனா அதுக்கு ஒரு தொகைன்னு பெரும்பாடு படனும்.. ...கூடுமானவரைக்கும் தேவையில்லாமல் கடன் வாங்கக் கூடாது..

ஒரே ஒரு வருமானத்தை மட்டும் நம்புவது
குடும்பத்துல ஒருத்தரோட வருமானம் மட்டும் போதும்னு கணக்குப் போட்டு வாழ்க்கையை நடத்துவது கொஞ்சம் பெருமையாக இருக்கலாம். ஆனால் சிக்கல்னு வரும்போதுதான் தெரியும்... நிறுவனங்களில் பணிபுரிவதாகட்டும்,, பிசினஸாகட்டும்.. திடீர்னு நீங்க நினைச்சு பார்க்காத ஒன்னு நடந்துருச்சா என்ன செய்வீங்க? அதனால எப்பவும் பல வழிகளில் வருமானம் வரும் வகையில் பார்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது. இப்படி செய்வது ரிஸ்க் இல்லாமல் இருக்கலாம் என்பது மட்டுமில்லை.. வருமானமும் கூடும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே கூட ஆன்லைனில் ஏதாவது பிசினஸ் செய்யலாம்?சைடுல தனியே ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம்

அவசரகால தேவைக்கான பணத்தை உருவாக்காமல் இருப்பது
அவசரகால தேவைக்காக நிச்சயம் பணத்தை சேமித்து வைக்கனும் உதாரணமாக இன்சூரன்ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு பணத்தை சேமிக்காம போனால் அவசரகாலத்துல கைவிடப்பட்டுவிட்டோமோங்கிற மனநிலையைதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்க ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் எனில் உங்களுக்கான சம்பள செக் லேட்டாகுதுன்னா? என்ன செய்வீங்க.. அப்ப இந்த மாதிரி ஒரு தொகை கைடுக்கும்... உங்க சம்பளத்துல ஒரு 20 விழுக்காடாவது இதுக்கு தனியா எடுத்து வெச்சுப் பாருங்க.. நிச்சயம் அவசரகாலத்துல இதனோட பலன் தெரியும்..

பணமதிப்பை தவறாக மதிப்பிடுவது
பணத்தோட மதிப்பை ரொம்பவும் தவறாகவே மதிப்பிட்டு வைப்பது என்பது சிக்கலை ஏற்படுத்திவிடும். உங்களோட செலவுக்கான திட்டமிடலில் இது முக்கிய பங்கு வகிக்கக் கூடியது. பண மதிப்போட நிலவரத்தை தெரிஞ்சுகிட்டுத்தான் உங்களோட செலவுத் திட்டமிடலை உருவாக்கனும். அதுதான் உங்களுக்கு கை கொடுக்கக் கூடியது. எதிர்காலத்திலும் இது ரொம்பவே உதவியாக இருக்கும்.

கடனிலேயே வாழ்வது
உங்க வருமானத்துக்குள்ள செலவு பண்றது ஓகே.. வருமானத்தைவிட கூடுதலாக செலவு பன்றது ரொம்பவே தப்பு...அப்படி ஒரு பழக்கம் இருந்துச்சுன்னா நிச்சயமாக நீங்கள் கடன் என்கிற வலையில் விழுந்துடுவீங்க.. அதுல இருந்து மீள்வது ரொம்பவே கடினமானது.. லோன்.. லோன்..ன்னு அலைந்து கொண்டே இருக்கனும்.. ஒரு லோன் முடிந்த உடன் இன்னொரு லோன்னு போக வேண்டியதிருக்கும்... கடன் வாங்குறது தப்பில்ல.. கடனிலேயே வாழ்றதுதான் தப்பு

பாதுகாப்பற்ற வாழ்க்கை
இன்சூரன்ஸ் மதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வதும் அதனை முறையாகக் கடைபிடிக்கிறதும் ரொம்பவும் முக்கியம். நிச்சயமாக உங்களுக்கு ஆபத்தான காலங்களில் உதவும். அது அதுபோலதான் முதலீடுகளும்.. முதலீடுகளும் ஒருவகையில் இன்சூரன்ஸ்தான். ரொம்ப உதவக் கூடியது.
இந்த மாதிரி சில விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொண்டால் பண நெருக்கடியை பக்காவா சமாளிக்கலாம்..

கருத்துரையிடுக Disqus

 
Top