0

 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ என்பவர் செய்த ஆய்வு பெண்ணின் மனதின் ஆழத்தை கண்டுபிடித்துள்ளது.  ஆனால் எண்ணற்ற பல பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து கிடக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார் இவர்.

பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்?  என்று அவர் ஆய்வின் முடிவில் தெரிவித்த சில தகவல்கள் உங்களுக்காக..

1. தனித்திறன் (எதுலன்னு தெரியலையே) ஆண்மகனையே தங்கள் துணையாக தேர்ந்தெடுப்போம் என்று 80 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர்.  ஆண்கள் எதையும் வித்தியாசமா க(வித்தியாசம்ன்னா எப்படி) சொல்லவோ, செய்யவோ வேண்டும் என்று நிறைய பெண்கள் கூறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.


2.  ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்  மதிப்பார்கள் (இது எங்கே) என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.


3. விடுமுறை நாட்களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும், ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் விருப்பமாக இருக்கிறது.


4. வாரம் ஒருமுறையாவது கணவர் தங்களை தியேட்டர், ஹோட்டல்,பீச், பார்க்  என்று அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்.


5. காலை நேரத்தில் அலுவலகம் புறப்படும் ஆண் அதை எடு, இதை எடு என்று சொல்லக்கூடாதாம்.


6. பொம்மை போல,அதுவும் சாவி கொடுத்த பொம்மைப் போல எங்களை  பயன்படுத்தக்கூடாது என்பது எல்லாப் பெண்களின் எண்ணமாக இருக்கிறது.


7. தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகப் பெண்களின் விருப்பமாக உள்ளது.


8. எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும் மனைவியோடு சேர்ந்தே எடுக்க வேண்டும் என பெருவாரியான பெண்கள் விருப்பமாகும்.


9. எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக்கொண்டிருக்கும் ஆண்களை சுத்தமாக, அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.


என்ன நண்பர்களே பெண்களின் மனதில் உள்ள ரகசியங்களைப் படித்துப் பார்த்ததும் மயக்கம் வருகிறதா? 


இது சும்மா சாம்பிள்தான். அவரின் முழு அறிக்கைப் படித்தால் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவீர்கள்.


ஆனால் அவரின் அறிக்கைப் படி நடந்தால் குடும்பம் சிறப்பாக அமையுமாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top