வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வரும், வந்தநோய் வளர்ந்து கொண்டே இருக்கும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாதப்புகழ் நமக்கு ஏற்படும். இவையெல்லாம் நமது வீட்டில் சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். நண்பர்,உறவினர் வீடுகளில் மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது.அப்படிச் சாப்பிட்டால் மறு நாளிலிருந்தே அவருக்கும் நமக்கும் பகையாகிவிடும். வீடு தவிர மற்ற இடங்களில் வடக்கு நோக்கிச் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது
- பொதுவாக உணவை வலது கையால் மட்டுமே உண்ணலாம். இடது கையால் உணவை பரிமாறலாம்.
- இந்தியாவில் சப்பாத்தி மற்றும் குழம்பு போன்ற பல வகை உணவுகள் கையாலேயே உண்பார்கள், அதுவே வழக்கமாக ஏற்றுக்கொண்ட செய்முறையாகும்.
- உணவு உண்பதற்கு முன்னால் இரு கைகளையும் நன்றாக கழுவும் பழக்கம் வாடிக்கையாக நாம் இந்தியர்களில் காணலாம். உணவு உண்ட பின்னரும், கைகளை நன்றாக கழுவும் வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். மேலும் வழக்கமாக. விரல்களை சுத்தப்படுத்த, ஒரு கிண்ணத்தில் மிதமான சூட்டுடன் கொண்ட நீர், தண்ணீர் அல்லது ஜலம் ஒரு எலுமிச்சம்பழத்தின் துண்டுடன் வழங்கப் பெறுகிறது.
- இந்தியாவின் வடக்கு மாகாணங்களில், குழம்பை உண்ணும் பொழுது, அவை விரல்களில் படாத வாறு லாகவமாக உண்ணும் திறமையை வளர்த்துள்ளனர். விரல் நுனிகளை மட்டுமே அவர்கள் அதற்கு பயன் படுத்துவார்கள.
- சப்பாத்தி, ரொட்டி, நான் போன்ற தட்டையான ரொட்டி உணவுகளை உண்ணும் பொழுது, அவற்றை துண்டுகளாக்கி குழம்பு மற்றும் சுவைச்சாறுகளில் நன்றாக உமிழ வைத்தும் உண்ணலாம்.
- தென் இந்தியாவில், கையின் நான்கு விரல்களையும் இரண்டாவது மடிப்பு வரை பயன்படுத்தி உணவை கையால் எடுக்கலாம் பின்னர் வாய்க்குள் செலுத்தலாம் மேலும் கட்டை விரலின் முன் பாகத்தைக் கொண்டு அந்த உணவை உள்ளே தள்ளுவதற்கு பயன் படுத்தலாம். தென் இந்திய மரபுகள் படி. இந்த நான்கு விரல்கள் ஒரு தேக்கரன்டியைப் போல உணவை எடுக்கப் பயன்படுகின்றன. கட்டை விரல் உணவை வாய்க்குள் செலுத்த பயன்படுகிறது. உணவை ஐந்து விரல்களையும் கொண்டு திணிப்பது அநாகரீகமாகும்.
- உங்கள் தட்டில் நீங்கள் சாப்பிட உட்கார்ந்த பிறகு, உங்கள் எச்சில் கை கொண்டு பிறருக்கு உணவு வழங்கவோ, பகிர்ந்து கொள்ளவோ கூடாது. அதனால், ஒரு புதிய சுத்தமான தேக்கரண்டியை கேட்டுப் பெறுங்கள், அதற்குப் பின் பொதுவாக உணவை வைத்திருக்கும் தட்டில் இருந்து உங்களுக்கு வேண்டிய உணவை இடது கையால் எடுத்து பரிமாறிக்கொள்ளலாம்.
- சமைக்கப்பெற்ற ஒவ்வொரு உணவு வகையையும் ருசி பார்க்கவோ அல்லது உண்ணவோ தேவை இல்லை, ஆனால் மரியாதை நிமித்தம் உங்கள் தட்டில் உள்ள அனைத்து உணவையும் முழ்தும் உண்ணவேண்டும். இதன் காரணமாக, உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டுமே கேட்டுப் பெறுங்கள்.
- இனிப்பு வகைகளும் கைகளைக் கொண்டே உண்பது சகஜம், அதனால் நீங்கள் பயன் படுத்தும் தண்ணீர் குவளைகள் சுத்தமாகவும், கறை படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
- அனைவரும் உண்ட பிறகே நீங்கள் இருக்கையை விட்டு எழுந்திருக்கலாம் அல்லது விருந்தளிப்பவரின் அனுமதி பெற்று எழுந்து செல்லலாம். உங்களுக்கு சீக்கிரமாக செல்ல வேண்டும் என்றால், நீங்கள் அதற்கான அனுமதியை விருந்தளிப்பவரிடம் இருந்து முதலிலேயே பெறுவது மிகவும் நன்று.
- தென் இந்தியாவில் வென்னீரால் சுத்தம் செய்த அழகான வாழை இலைகளில் உணவு பரிமாறுவது வழக்கமாகும். இலையின் மேல் பாகத்தில் கறிகாய் கூட்டு வகைகளும், கீழ் பாகத்தில் அன்னம், இனிப்புகள், மற்றும் சிற்றுண்டி வகைகள், குழம்பு ஆகியவை பரிமாறப் படுகின்றன.
- உணவு உண்ட பிறகு வாழை இலையை திறந்த படி அப்படியே விட்டுச் செல்வது நாகரீகமல்ல. மேல் பாகத்து இலை கீழ் பாகத்து இலையை மூடுமாறு இலையை மடித்து வைக்க வேண்டும். கீழ் பாகத்து இலையைக் கொண்டு மேல் பாகத்தை மூடுவது அவமரியாதை ஆகும், பொதுவாக ஒரு வீட்டில் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளில் மட்டுமே வாழை இலை மேல் நோக்கி மடிக்கலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus