பெயர் : வேலையில்லாதவன்
பிறந்த தேதி : கல்யாணம் முடிஞ்சிருந்தா இரண்டு பிள்ளைகள் இருக்கும்
முகவரி : வெட்டி ஆபிஸர்னா எவனாயிருந்தாலும் கரெக்டா
சொல்லிடுவான்
சாதி : சொன்னா மட்டும் வேலை கிடச்சுருமாக்கும்
படிப்பு : படிச்சு வாங்கின பட்டம் - 'எம்.பி.ஏ'
கிடச்ச பட்டம் - வீட்ல 'தண்டச்சோறு'
கடைக்கு போனா 'கடங்காரன்'
ஊர்ல 'தறுதல'
ப்ரெண்ட்ஸ்குள்ள 'வெட்டிஆபிசர்'
எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன் : நிறைய அறிவு இருக்கு(அது யாருக்கும் வேண்டாமாம்)
பொழுதுபோக்கு
: எல்லா கப்பல் வியாபாரிக்கும்(கம்பெனிக்கும்) விண்ணப்பம்
அனுப்புவது,
காலையில டீக்கடைக்கு போனா அம்புட்டு
பேப்பரையும் ஒருத்தரையும் படிக்கவிடாம
படிக்கிறது, ரோட்ல
போற பொண்ணுங்ககிட்ட சந்தோசமா திட்டு வாங்கிறது.
எதிர்பார்ப்பு : காலில்லாத ஒருத்தன் கால்பந்தாட்டத்த பார்க்கிற மாதிரி
தபால்காரன எதிர்பார்ப்பது.
எதிர்கால லட்சியம் : வேலை கொடுக்கிறவனுக்கு கோவில் கட்டணும்.
எப்படியாவது
ஒரு வேலையில சேர்ந்து நல்லதா ஒரு சட்டை
எடுக்கணும்.எம்பிளாய்மெண்ட் ஆபிஸை
ஹோட்டலா
மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)
பொறாமை : ஹோட்டல கிளீன் பண்ணும் சின்னப்பையன் கூட நிறைய
பொறாமை : ஹோட்டல கிளீன் பண்ணும் சின்னப்பையன் கூட நிறைய
சம்பாதிப்பது.
பிடித்த சினிமா : வேலைக்காரன்.
பிடித்த நடிகர்கள் : ஹீரோவுடன் சுத்தும் நண்பர்கள் குரூப்(அவங்கதான் எப்பவும்
வேலையில்லாம இருப்பாங்க)
பிடித்த இடம் : டீக்கடை, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும் கட்டைச்சுவர்( அத
வளரவிடாம மெயிண்டெயின் பண்றோம்)
பிடித்த நண்பர்கள் : என்னைப்போல் ஒருவன்( நிறைய இருக்காய்ங்க)
எரிச்சலான வார்த்தை : இன்னுமா வேலை கிடைக்கல'
பிடிக்காத விசயம் : வேலை காலி இல்லை' விளம்பர போர்டு.
ஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும்
போது.
மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

கருத்துரையிடுக Facebook Disqus