0

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி  

"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு."  சற்று அதட்டலான குரலில் சொன்னாள் கவிதா

"100 கிமீ எல்லாம் ஒரு வேகமா? எல்லாம் ஒரு த்ரில் தான் கொஞ்சம் அனுபவி"  சொன்னபடியே இன்னும் வேகத்தை கூட்டினான் குமார்

"சொன்னா கேளு மெதுவா போ, எனக்கு பயமா இருக்கு" - இறுக்கி கட்டிக்கொண்டபடி சொல்லிக்கொண்டே வந்தாள்.    

கொஞ்ச நேரத்தில்

"செல்லம் இந்த ஹெல்மெட் இடைஞ்சலா இருக்கு. இதை கழட்டி நீ மாட்டிக்கவேன்"  வண்டியின் வேகத்தை குறைக்காமல் கவிதாவிடம் சொன்னான்.

"ஓட்டுறவங்க தானே ஹெல்மெட் போடணும்?"

"சொன்னா கேளு இந்த ஹெல்மெட்டை நீ மாட்டிக்க"

தொடர்ந்து குமார் வற்புறுத்தியதால் ஹெல்மெட்டை கழட்டி தன் தலையில் மாட்டிக்கொண்டாள் கவிதா

மறுநாள் காலை தினசரியில்

"தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள் ஆனது. வண்டியின் பிரேக் உடைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். பின்னால் அமர்ந்து இருந்த பெண் பலமான காயங்களுடன் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைக்குப்பின் கண் விழித்தார்."

உண்மையில், வண்டியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறை உணர்ந்தவுடனே அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டி கவிதாவை மாட்டிக்கொள்ள வற்புறுத்தி இருக்கிறான் குமார்.

கருத்துரையிடுக Disqus

 
Top