0

 
ஒரு கப் மோல்ட் ஜெல்லி தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஜெலட்டின் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டேபிள்ஸ்பூன்
சுடு தண்ணீர் - 1 கப்
அன்னாசிப்பழம் - 40 கிராம்
கிராம்எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
almond (பாதாம்பருப்பு) - 2
அன்னாசி சாறு - 2 மேசைக்கரண்டி
காரட் துருவியது - 50 கிராம்

செய்முறை:
1. பச்சை தண்ணீரில் ஜெலட்டினை ஊர வைத்து அதை கரைக்க சூடு பண்ணவும்.
2. அன்னாசிப்பழ சாறு எடுக்க பழத்தை லேசாக பிழிந்து மீதி பழத்தை துண்டுகளாக தனியாக எடுத்து வைக்கவும்.
3. பழச்சாற்றில் தண்ணீரை ஊற்றி 1 1/2 கப் வருமாறு பார்த்துக் கொள்ளவும். வினிகர் அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.
4. அன்னாசி பழம், துண்டுகளுடன் துருவிய காரட், வால்நட் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
5. எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஜெல்லி மொல்ட்டில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைக்கவும். நன்றாக கெட்டியான பின்னர் எடுத்து பரிமாறவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top