வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும், "ரோபாட் உணவகம் உங்களை வரவேற்கிறது...' என பதிவு செய்யப்பட்ட குரலில், ஒரு ரோபாட், வரவேற்கும்.
சமையல் பணியில் உதவுவதற்கும், சில ரோபாட்கள் உள்ளன. சமை யலுக்கு தேவை யான உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை, இந்த ரோபாட்கள் செய்யும்.
உணவு தயாரானதும், அதை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்வதும், ரோபாட் தான். இவை நடந்து செல்வதற்காகவே, ஓட்டலில் பிரத்யேக வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒவ்வொரு ரோபாட்டும், 1.3 மீட்டரிலிருந்து, 1.6 மீட்டர் உயரமுடையவை. பத்துக்கும் மேற்பட்ட முக உணர்வுகளை வெளிப்படுத்தும் தொழில்நுட்பமும், இந்த ரோபாட்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சீன மொழியில், ஒரு சில வார்த்தைகளை, இந்த ரோபாட்கள் பேசும். இந்த ரோபாட்களை இயக்குவதற்காக, ஓட்டலின் ஒரு பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பத்து இன்ஜினியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த ரோபாட்களுக்கு இரண்டு மணி நேரம், "சார்ஜ்' ஏற்றினால், ஐந்து மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சீனாவைச் சேர்ந்த பிரபலமான ரோபாட் தயாரிப்பு நிறுவனம் தான், இந்த ஓட்டலை அமைத்துள்ளது.
இதற்காக, 44 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஒரு ரோபாட்டை வடிவமைப்பதற்கு, 22 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ரோபாட்களை பிரபலப்படுத்துவதற்காகவே, இவர்கள் இந்த ஓட்டலை துவக்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சாப்பிடுவதற்கு, ஒருவருக்கான சாப்பாட்டு செலவு, குறைந்தது, 1,000 ரூபாய்.
இந்த ஓட்டலுக்காக போட்ட முதலீட்டை எடுப்பதற்கு, இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது, சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இதைப் பார்த்து, பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள், ரோபாட்களை விலைக்கு வாங்கும் என்ற நப்பாசையில் இருக்கிறது, அந்த நிறுவனம்.
"அதெல்லாம் சரி... ரோபாட்களை பயன்படுத்துவதற்கு, பல்வேறு தொழில்கள் இருக்கும்போது, ஓட்டல் தொழிலுக்காக பயன்படுத்துவது ஏன்?' என கேட்டால், "சீனாவில் ஓட்டல் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காகவே, ஓட்டல் வேலைக்கான ரோபாட்களை தயார் செய்துள்ளோம்...' என்கின்றனர்.
கருத்துரையிடுக Facebook Disqus