0

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில்:
 
கடந்த சில நாட்களாக ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் லட்சக்கனக்கான மதிப்புள்ள கோவில் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு ரூ 1,00,000 கோடி.  கோல்டன் பட்டம், 17 கிலோ தங்க நாணயங்கள்,  2.5 கிலோ எடையுள்ள 18 அடி நீண்ட தங்க நகை, தங்க கயிறுகள்,வைர நகைகள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்ககுழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர்:
  ஆண்டு தோறும சுமார் ரூ 650 கோடி வருமானம் பெறும் திருப்பதி பாலாஜி இந்தியாவின் இரண்டாவது பணக்கார கடவுள். கோவிலின் தங்கம் 3000 கிலோ, ரூ 1000 கோடி ரூபாய் பணம்  பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. ரூ 300 கோடி, 350 கிலோ தங்கம்  மற்றும் நன்கொடைகள், 500 கிலோ வெள்ளி  பொருட்கள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெறப்படுகிறது.

ஸ்ரீ சாயி சன்ஸ்தான் ஷீரடி 
   மகாராஷ்டிரா ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ. 32 கோடி முதலீடுகள், 450 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் கோவில் நம்பிக்கை ரூ 1,288 கோடி மற்றும் ரூ 1,123 கோடி மதிப்புள்ள தங்க பதக்கங்கள்,  ரூ 6,12 லட்சம் மதிப்புள்ள  தங்கநாணயங்கள், ரூ 3.26 கோடி மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் கொண்டிருக்கிறது. ஆண்டு வருவாய் சுமார் ரூ 450கோடி உள்ளது.

மாதா வைஷ்ணவ தேவி: 
திருப்பதி பாலாஜி பிறகு நாட்டின் இரண்டாவது அதிக விஜயம் செய்யும் கோவில் இது. ஜம்மு காஷ்மீர் கட்ரா அருகே உள்ளது. வைஷ்ணவ தேவி கோவில் ரூ.500கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறதுஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, கோவிலில் ரூ 40 கோடி தினசரி வருமானம் கிடைகிறது.

சித்தி விநாயகர் கோவில்
    மகாராஷ்டிரமாநிலத்தில் மும்பை மைய பகுதியில் அமைந்துள்ள,  இரண்டாவது பணக்கார கோயில் இது. ரூ 46 கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ 125 கோடி உள்ளது. பக்தர்களால்  பிரபலமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகள் ரூ 10-15 கோடி வசூல் ஆகிறது. ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை கோவில் சொத்துக்களை மார்ச்  2009 ஆண்டு வரை  கணக்கிட்ட போது  சுமார் 140கோடி சொத்துகள் இருந்தது.

குருவாயூர் கோவில்
    கேரளா தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் ஒரு ஒன்பது உறுப்பினர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படும் இக் கோவில்  தென் இந்தியாவில் மிக புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். ஆண்டுதோறும்ரூ 2.5 கோடி வருமானம் கிடைகிறது.நிரந்தர வைப்பு நிதி சுமார் ரூ 125 கோடி உள்ளது. உதயஸ்த்தமான பூஜைக்கு 2049 நபர்கள் காத்திருப்பில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அந்த பூஜைக்கு ரூ 50000 செலவாகிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top