0
நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.

அமேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.

கருத்துரையிடுக Disqus

 
Top