நாமெல்லாம் படிக்கும் பொது பள்ளியில் மணிக்கணக்காக படித்து நாட்கணக்கில் 'நெட்டுரு' செய்தாலும் புரியாத பல விஷயங்கள் இப்போதுள்ள சிறுசுகளுக்கு சூப்பராக புரிந்து கொள்ள முடிகிறது அதற்கு முக்கிய காரணம் இணையம்.
ஆமாம் பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவிலும் , சில ஐரோப்பிய நாடுகளிலும் கொடிகட்டிப்பறந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற முறை, இப்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து கொண்டிருக்கிறது.
பெரும்பாலும் பல தனியார்
பள்ளிகளில் இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறைக்கு மாறிவிட்டன. சில அரசு
பள்ளிகளிலும் இதை ஏற்றுக்கொண்டாலும், இன்னும் கரும்பலகை, சாக்பீஸ்
முறையே பின்பற்றுகிறார்கள். ஆனால் வரும் காலங்களில் மொத்தமாக கரும்பலகை,
சாக்பீஸுக்கு குட்பை சொல்லப்போகிறோம் என்பது மட்டும் நிச்சயம்.
அதென்ன ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை
என்றால் இந்த வகுப்பறையில் ஆசியர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மாணவன்
தனியே படிக்க முடியும். ஒரு சிக்கலான சயின்ஸ் பாடத்தை நடத்த வேண்டுமானால்
மாணவனுக்கு புரியும் வரை பல முறை ஆசிரியர் கத்த வேண்டியதில்லை.
ஒரு கம்ப்யூட்டர் இன்டர்நெட்
மூலம் அந்தப் பாடத்தைப் பற்றிய வீடியோவை போட்டுவிட்டு நிம்மதியாக
உட்கார்ந்து விட்டால் போதும். அந்த வீடியோவே பல பரிமாணத்தில் அந்தப்
பாடத்தை விளக்கிவிடும்.
எந்த ஒரு பாடமாக இருந்தாலும்,அதப
படிப்பதைக் காட்டிலும் அதை வீடியோவாக விளக்கினால் புரியும் தானே. அதைத்தான்
செய்கிறது இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை.
பாடங்களை நெட்டுருப் போட்டு
நூற்றுக்கு நூறு வாங்குவதில் எந்த பயனும் இல்லை. புரிந்து கொண்டு படித்தால்
தான் அவன் அந்தப்பாடத்தில் பல சாதனைகள் புரியமுடியும்.அதை இந்த இணைய வழி
‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை எளிமையாகச் சொல்லித்தருகிறது.
இந்த ஸ்மார்ட் கிளாஸ் முறையைப் பற்றி பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதில் ஒரு புரட்சி ஏற்பட்டால் தவிர இதை தமிழகத்தில் பிரபலப் படுத்த முடியும்.

கருத்துரையிடுக Facebook Disqus