0
(காதல் அபிமானிகள் இதை படிக்க வேண்டாம்)
நித்திரை கொள்ளும்போதும்
நீயே வந்து சிரிக்கிறாய்
நித்தமும் நீயே வந்து
சித்ரவதை செய்கிறாய்
எத்திசை நோக்கினும் காதலே!
அத்திசை நிறைந்து நிற்கிறாய்
நாட்டை பற்றி சிந்திக்கும்போதும்
நடுநடுவே நாட்டியமாடும் காதலே!
நலமுடன் நாடு இருந்தால்தானே  
வளமுடன் காதல் செய்யலாம்
வீட்டை பற்றி சிந்திக்கும்போதும்
வேடம் கட்டி ஆடும் காதலே!
நலமுடன் வீடு இருந்தால்தானே  
வளமுடன் காதல் செய்யலாம்  
காண்பதெல்லாம் காதல் கனவே
நினைப்பதெல்லாம் காதல் நினைவே
எழுதுவதெல்லாம் காதல் கவிதையே
அந்தரங்கம் கூட காதல் போர்வையில்
அரங்கேறுதே காதல் கவிதைகளில்!
  
எல்லா தளத்திலும் நிறைந்தது நீயே  
ஜொள்ளு வடிந்து கணணி நனையுதே!
லொள்ளு பண்ணாமல் போ என்னையே  
இன்னும் எழுதவேண்டுமோ உன்னையே 
உரிக்க உரிக்க ஒன்றுமில்லை 
உரித்த என்னையே
சிந்தவைத்தாய் கண்ணீரை  
காதலே! நீ ஒரு வெங்காயம்!
காதலில் வருமே பெரும்காயம்! 
காதலே! நீ ஒரு வெங்...காயம்!
காயமே  இது பொய்யடா 
            மாயமே  இது செய்யுமடா

கருத்துரையிடுக Disqus

 
Top