AUTOMOBILE (Automotive)நம் தமிழில் வாகனவியல்
ஆட்டோமொபைல் என்றால் தானாக சக்தியை உற்பத்தி செய்து இயங்கும் இயந்திரம் ஆகும்.
வாகனங்களின் இதயம் என்றால் அது என்ஜின்தான்.
என்ஜின் எனப்படுவது வாகனத்தின் சக்தி உற்பத்தி ஆலையாகும்.
என்ஜின் இயங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்க்கு முன் என்ஜின் பாகங்களை அறிந்து கொள்வோம்.
என்ஜின்யில் உள்ள முக்கிய வகைகள்:
என்ஜின் 4 பிரிவுகளை கொண்டது;
1. எரிதல் அடிப்படையில்(based on combustion)
அ. வெளிப்புற எரிதல்(external combustion engine)
பயன்பாட்டில் இல்லை
ஆ. உட்ப்புற எரிதல்(internal combustion engine)
அனைத்து வாகனங்களிலும்
2. எரிபொருள் அடிப்படையில் (fuel based)
டீசல், பெட்ரோல், எல்பிஜி, இன்னும் பிற...
3. பயன்பாட்டின் அடிப்படையில்(application based)
ஆட்டோமொபைல் என்ஜின்,ராக்கெட் என்ஜின், நிலையான என்ஜின்,இன்னும் பிற...
4. வடிவமைப்பு அடிப்படையில்(construction based)
உட்ப்புற கட்டமைப்பு(inline), V கட்டமைப்பு, W கட்டமைப்பு...
Internal Combustion Engine (IC Engine):
உலக அளவில் உட்ப்புற எரிதல் என்ஜின்தான் அதிகயளவில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு IC Engine பயன்படுத்தப்படுகிறது. என்ஜின் உட்ப்புறமாக எரிபொருளை எரித்து ஆற்றலை தருகிறது. அந்த ஆற்றலை கொண்டு வாகனம் இயங்குகிறது.
எ.கா: கார், பஸ்,லாரி, பைக்....
External Combustion Engine (EC Engine):
வெளிப்புற என்ஜின் அதிகயளவில் பயன்பாட்டில் இல்லை. ஸ்டீம் என்ஜின் வெளிப்புற என்ஜின் ஆகும். வெளிப்புறமாக உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை கொன்டு என்ஜின் இயங்கும்.
எ.கா: ஸ்டீம் ரயில் என்ஜின், ஸ்டீம் ஜென்ரேட்டர்
SI Engine:
SI Engine என்றால் Spark Ignition Engine அதாவது தீப்பொறி மூலம் எரிபொருள்
எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும். இதன் மூலம் வாகனம்
இயங்கும்.
தீப்பொறி எவ்வாறு கிடைக்கும் என்றால் spark plug மூலம் கிடைக்கும்.
ஸ்பார்க் ப்ளாக் என்றால் என்ன எவ்வாறு இயங்கும் என்பதை என்ஜின்
பாகங்கள் பகுதியில் கான்போம்.
SI Engine என்றால் என்ன மிக எளிமையாக அறிய பெட்ரோல் மூலம் இயங்கும் என்ஜின்கள் SI Engine ஆகும்.
CI Engine:
CI Engine என்றால் Compression Ignition Engine அதாவது மிகுந்த
அழுத்ததுடன் இருக்கும் காற்றில் எரிபொருளை தெளிக்கும் பொழுது எரிபொருள்
எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும். இதன் மூலம் வாகனம் இயங்கும்.
எரிபொருள் எவ்வாறு தெளிக்கப்படும் என்றால் Injector மூலம் மிகுந்த அழுத்ததுடன்(High Pressure) எரிபொருள் தெளிக்கப்படும்.
CI Engine என்றால் என்ன மிக எளிமையாக அறிய டீசல் மூலம் இயங்கும் என்ஜின்கள் CI Engine ஆகும்.
Self Ignition Temperature எனப்படும் தீ பற்றும் வெப்பநிலை
பெட்ரோல்: 246 °C
டீசல்: 210°C


கருத்துரையிடுக Facebook Disqus