0
“சார் என்னைத் தெரியுதா?” தன்னுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர் முத்துராமனிடம் வினவினான் பொற்செழியன்.

“தெரியலையேப்பா!”

“நான் தான் சார் பொற்செழியன், எட்டுல இருந்து பத்து வரை நீங்கதான் சார் எனக்கு சயின்ஸ் டீச்சர். எப்பவும் நீ மாடு மேய்க்கத்தான்டா லாயக்குன்னு என்னை திட்டிட்டே இருப்பீங்களே, ஞாபகம் இருக்குதா சார்?”

“ஓ நீயாப்பா! இப்ப ஞாபகம் வருது, நான் அப்படித் திட்டினது நீ நல்லா படிக்கணும்னு தாம்பா, மனசுல எதும் வச்சுக்கிட்டு இல்ல, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கற?” தன் முன்னாள் மாணவனை வினவினார்.

“நீங்க சொன்ன மாதிரி மாடு தான் மேய்க்கறேன் சார்”

“என்னப்பா சொல்லுற?” அதிர்ச்சியாய் வினவினார்.

“மாடுதான் சார் மேய்க்கறேன்! ஆனா கொஞ்சம் பிரமாண்டமா, வேளான் துறையில முதுநிலை படிப்பு முடிச்சிட்டு பெரிய ‘டயரி ஃபார்ம்’ ஒண்ணூ வச்சிருக்கிறேன். அதுல ஆயிரம் கால்நடைகள் இருக்குது சார்” என்றவனை பெருமையாய் பார்த்தார் ஆசிரியர் முத்துராமன்.

கருத்துரையிடுக Disqus

 
Top