தொடர்ந்துவருபவை.தண்டனைகள் ஆரம்பகாலத்தில் மிகவும் கொடூரமானவைகளாக காட்டுமிராண்டித்தனமானவையாக இருந்தன.ஆனால் அவை சட்டபூர்வமாக்கப்பட்டிருந்தன.மனிதன் கூர்ப்படைந்து நாகரீகங்களாக தன்னைவளர்த்துக்கொண்டது மகிழ்ச்சியானவிடயம்தான்.தனிக்குழுக்களில் ஆரம்பித்து அரசுவரையான மனிதனின் வளர்ச்சியில் கூடவே வளர்ந்ததுதான் கொலைகளும் சித்ரவதைகளும்.கொலை சித்ரவதையுடன் ஒப்பிடும்போது சாதாரணவிடயம்தான்.மரணம் ஒரு சில நிமிடங்களில் நடந்துமுடிந்துவிடும் .மரணபயம்தான் எல்லாவற்றையும் விட மிகவும் மோசமானது மூளை எதை யோசிப்பது என்று தெரியாமல் தறியடிக்க ஆரம்பித்துவிடும்.சிதரவதைமூலம் இந்த மரணபயத்தை நாட்கணக்காக தொடர்ந்து கொடுக்கமுடியும்.அரசாட்சிக்காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் இருக்கின்றார்கள். அதில் பௌதிகம்,அல்கமி என்று மண்டையை குடைந்தவர்கள் ஒருபக்கம். ஆனால் ஒரு மனிதனை எப்படி மிகவும் பயங்கரவேதனையடையத்தக்கதாக சித்ரவதைக்கு ஆளாக்கலாம் என்று றூம்போட்டு சிந்தித்து தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்த விஞ்ஞானிகளும் அடக்கம்.பாவம் இவர்கள் இவர்களது கொலைக்கருவிகளில்தான் எத்தனை பௌதிக விதிகள் ஒளிந்திருக்கின்றன.இதைக்கண்டுபிடித்துக்கொடுத்தவுடன் முதல்வேலையாக இவர்களையே அதில் பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்று நீங்கள் கோபப்படலாம் ஆனால் அப்படியும் பல சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன.
ஒருவர் ஒரு கொலைக்கருவியைகண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டதும் ஏதோ
மனிதன் கூர்ப்படைவதைப்போல அந்தக்கருவி கால ஓட்டத்தில் கூர்ப்படைந்து
அதிகதிறனுள்ள கொலைக்கருவியாக உருவெடுக்கும்.பின் உயிரை எடுக்கும்.
வரலாற்றின் சில கொடுமையான பிரபலமான சித்ரவதைகள் உயிருடன் எரித்தல்,உடலைத்துண்டுதுண்டாக்குதல்,சக்கரத்தின் உதவியுடன் எலும்பை நொருக்குதல்,சிலுவையில் அறைதல்,உடலை நசுக்குதல்,உயிருடன் உடலை இரண்டு கூறுகளாக வாட்களால் அரிதல்,உடலில் பாரிய துளைகளை இடுதல்.இவைகள்தான் பிரபலமான தண்டனைகளாக குற்றவாளிகளுக்கும் துரோகிகளுக்கும் வழங்கப்பட்டுவந்தன.
இவ்வாறான தண்டனைகளில் அதிகமான தண்டனைகள் பொதுமக்கள் முன்பாகவே நிறைவேற்றப்பட்டுவந்தன.இதே தவற்றை உங்களில் வேறுயாரும் செய்தால்....!!! என்ற மிரட்டல் எச்சரிக்கை இது.
5இல் இருந்து 15 ஆம் நூற்றாண்டுவரையான மத்தியகாலப்பகுதிதான் வரலாற்ரில் மிகவும் வன்முறை நிறைந்தபகுதியாக கருதப்படுகின்றது.ஐரோப்பாவில் ஏற்ற தாழ்வுகள் மிருகத்தனங்கள் உச்சமாக இருந்த காலப்பகுதி இதுதான்.இந்த காலகட்டம்தான் கொலைக்கருவிகளின் வசந்தகாலம்.
வரலாற்றின் கொலைக்கருவிகளை/சித்ரவதைக்கருவிகளைப்பார்ப்போம்
வரலாற்றின் சில கொடுமையான பிரபலமான சித்ரவதைகள் உயிருடன் எரித்தல்,உடலைத்துண்டுதுண்டாக்குதல்,சக்கரத்தின் உதவியுடன் எலும்பை நொருக்குதல்,சிலுவையில் அறைதல்,உடலை நசுக்குதல்,உயிருடன் உடலை இரண்டு கூறுகளாக வாட்களால் அரிதல்,உடலில் பாரிய துளைகளை இடுதல்.இவைகள்தான் பிரபலமான தண்டனைகளாக குற்றவாளிகளுக்கும் துரோகிகளுக்கும் வழங்கப்பட்டுவந்தன.
இவ்வாறான தண்டனைகளில் அதிகமான தண்டனைகள் பொதுமக்கள் முன்பாகவே நிறைவேற்றப்பட்டுவந்தன.இதே தவற்றை உங்களில் வேறுயாரும் செய்தால்....!!! என்ற மிரட்டல் எச்சரிக்கை இது.
5இல் இருந்து 15 ஆம் நூற்றாண்டுவரையான மத்தியகாலப்பகுதிதான் வரலாற்ரில் மிகவும் வன்முறை நிறைந்தபகுதியாக கருதப்படுகின்றது.ஐரோப்பாவில் ஏற்ற தாழ்வுகள் மிருகத்தனங்கள் உச்சமாக இருந்த காலப்பகுதி இதுதான்.இந்த காலகட்டம்தான் கொலைக்கருவிகளின் வசந்தகாலம்.
வரலாற்றின் கொலைக்கருவிகளை/சித்ரவதைக்கருவிகளைப்பார்ப்போம்
The Brazen Bull(பித்தளையால் ஆக்கப்பட்ட காளை)
இது பண்டையகிரேக்க கொலைக்கருவி.ஒரு மனிதனை உள்ளே அடைக்கக்கூடியவகையில்
பெரிய எருது உருவம் பித்தளையினால் செய்யப்பட்டிருக்கும்.மனிதன் உள்ளே
செல்வத்ற்கென ஒரு வாசல் விடப்பட்டிருக்கும்.மக்கள் ஒன்றுகூடுமிடத்தில் இவ்
எருதினுள் குற்றவாளியை உள்ளே தள்ளி பூட்டி அடியில் தீ
வைத்துவிடுவார்கள்.குற்றவாளியை உள்ளே தள்ளுவதற்கு முன்பாக
நாக்கைவெட்டிவிடுவார்கள்.
பித்தளை அண்ணளவாக 1000 டிகிரிவரை செல்லும்.ஆனால் எம்மால் 100 செல்ஸியஸ்ஸை
கூட தாங்கமுடியாது.உள்ளே அகப்பட்டவரின் உடல் முதலில் நீரை இழக்கும்.அதுவே
நரகவேதனைதான்.காளை உருவத்தில் அடிப்பகுதி தீயுடன் நேரடித்தொடர்பில்
இருக்கும்.இதனால் அடிப்பகுதி அதிக வெப்பனிலையில் இருக்கும்.குற்றவாளி
அடிப்பகுதியில் கை,கால்களால் ஊன்றமுடியாது.ஆனால் வேறுவழியில்லை உள்ளே
ஒருவர் தவழும் அளவில்தான் இடம் விடப்பட்டிருக்கும்.நீரை இழந்த சருமம்
உலேகத்தில் பட்டதும் சருமம் கருகிவிடும்.அத்துடன் சுவாசிப்பது மிகவும்
கடினமாக இருக்கும் (உள்ளே காற்றின் வெப்பனிலை அனல் பறக்கும்)கத்தும்
சத்தமும் வெளியே கேட்காது.
எருதின் உள்ளே எருதின் தலைப்பகுதியில் குழல்போன்ற ஒரு அமைப்பு
இருக்கும்.உள்ளே இருக்கும் குற்றவாளி மரணிக்கும் தறுவாயில் சுவாசிப்பதற்காக
அதைப்பயன்படுத்துவார்.அது உண்மையில் ஒரு வாத்தியம்போல் செயற்படுவதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.குற்றவாளி அதை ஊதும்போது எருது கோபத்தில் கத்தும்
சத்தமாக அவ்வாத்தியத்திலிருந்து சத்தம் வெளியே கேட்கும்.இந்த சத்தத்துடன்
குற்றவாளி பரிதாபகரமாக கருகிவிடுவார்.தோல் கருகும்போது ஏற்படும் துர்
நாற்றம் வெளியே பரவுவதைத்தடுப்பதற்காக நறுமண மூலிகைகளையும் போட்டு கிரேக்க
காவலர்கள் எரிப்பார்கள்.
உருவாக்கியவர் உள்ளே தள்ளப்படுகின்றார் |
இந்தக்கொலைக்கருவியை கண்டுபிடித்து ஆறிமுகம் செய்தவர் "perillo" என்ற
உலோகத்தொழிலாளி.இந்தக்கருவி முதன்முதலில் பலிவாங்கியதும்
இவரைத்தான்.பலாறிஸ் என்ற கொடுங்கோலனுக்கு இதை அறிமுகம் செய்தபோதுperillo "
குற்றவாளி உள்ளே இருந்து அலறும் சத்தம் உங்களுக்கு இனைமையான சத்தமாக
வெளியே கேட்கும்" என்று கூறினார்.மன்னர் கூறினார் எங்கே அந்த வாத்தியத்தை
ஒருமுறை மீட்டிக்காட்டுபார்ப்போம் என்று கூற perillo உள்ளே சென்றான்.உடனே
கதவை மூடிவிட்டார்கள் அடியில் தீயை வைத்து அவனிலேயே முதலாவது பரிசோதனை
வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
The Head Crusher
(தலையை உடைக்கும் கருவி)
ஒரு குற்றவாளியிடமிருந்து ஒப்புதல்வாக்குமூலம் பெறுவதற்கு இது சிறந்தகருவியாகும். இக்கருவியால் மரணவேதனையை பல மணித்தியாலங்களுக்கு வழங்க முடியும். இந்த தண்டனை இடை நடுவில் நிறுத்தப்படுமாயின் குணப்படுத்தமுடியாத வகையில் குற்றவாளிக்கு பாரிய சேதங்கள் ஏற்படும்.மூளை கண்களில் அதிக பாதிப்புக்கள் ஏற்படும்.
The Rack
இத்தண்டனைமுறையில் குற்றவாளியை உருளைகள்,கப்பிகள் இணைக்கப்பட்ட
மரப்பலகையில் இணைத்துவிடுவார்கள்.முக்கியமாக குற்றவாளியின் கை,கால்கள்
கயிற்றுடன் இணைக்கப்படும்.ஆரம்பத்தில் இது செயின்ட் வின்சென்ட் என்பவரால்
பயன்படுத்தப்பட்டு ஃபாதர் ரெரூலியனால் கத்தோலிக்க சமயத்தை
எதிர்ப்பவர்களுக்கு எதிராகபயன்படுத்தப்பட்டது.மத்தியகாலப்பகுதியில் இது
உருமாற்றமடைந்தது இந்தக்கருவியில் கூர்முனையைக்கொண்ட ஈட்டிகள்
கத்திகளைப்பொருத்தினார்கள்.இத்தண்டனைமுறை நூற்றாண்டுகாலமாக ஐரோப்பியாவில்
நடைமுறையில் இருந்தது.குற்றவாளியைக்கயிற்றில் இணைத்தபின் கயிறு படிப்படியாக
இறுக்கப்படும்.அப்போது சத்தத்துடன் குற்றவாளியின் மூட்டுக்கள்
உடையும்.மேலும் இறுக்கினால் மூட்டுக்கள் காணாமலே போய்விடும்.
The Breaking Wheel(சக்கரத்தின் உதவியினால் கொல்லுதல்)
கொலை,சித்ரவதைக்கு சக்கரங்கள் பல
வடிவங்களில்பயன்படுத்தப்பட்டுவந்தன.குற்றவாளியை பெரிய மரச்சக்கரத்தில்
கட்டிவைத்து மலை உச்சியில் இருந்து கீழே
உருட்டிவிடுதல்,குற்றவாளிசிலவேளைகளில் தீ வைக்கப்பட்டும்
உருட்டப்படுவார்.குற்றவாளியை சக்கரத்தில் கட்டி சக்கரத்தை பெண்டூலம்போல்
ஆடவிட்டு அடியில் தீவைத்தல் அல்லது கூரியாஆணிகளை வைத்தல், இன்னொரு முறை
என்னவெனில் குற்றவாளியின் எலும்புகளை இரும்புக்கம்பிகளால் அடித்து
நொருக்கியபின்னர் உயரமான இடத்தில் இருக்கும் சக்கரத்தின்மேல்
போட்டுவிடுவார்கள்.குற்ற்வாளியால் அசையமுடியாது பறவைகள் கொத்தி தின்னலாம்
அத்துடன் சூரியவெளிச்சமே குற்றவாளிக்கு எமனாகிவிடும்.
The pillory
2
பலகைகளுக்கிடையில் குற்றவாளியை மாட்டிவிடுவார்கள்.படத்தைப்பார்ப்பதன்
மூலம் எப்படி செயற்படுகின்றது என்பதைப்புரிந்துகொள்ள முடியும்.இது எந்த
காயங்களையும் குற்றவாளிக்குக்கொடுக்காது.சற்று அசௌகரியமாக
இருக்கும்.பிணைக்கப்பட்ட குற்றவாளியை மக்கள் முன்
நிறுத்துவார்கள்.குற்றவாளியின் குற்றத்தை மக்கள் முன் கூறி
அவமானப்படுத்துமாறு கூறுவார்கள்.மக்கள் கற்கள்,முட்டைகள் என கையில்
அகப்பட்டதால் எறிவார்கள்.கற்காளால் எறிந்ததால் மரணம்
சம்பவித்திருக்கின்றது.பொதுவாக ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை அல்லது
வேறு பாரிய தண்டனைகளை வழங்குவதற்கு மக்கள் முன்பாக இப்படித்தான் குற்றவாளியை அழைத்துச்செல்வார்கள்.1274 இல் இருந்து இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
The Iron Maiden
ஒருகாலத்தில் இது கற்பனையான கருவியாகவே கருதப்பட்டது.இது மிகவும் பிரபலமான
சித்ரவதைக்கருவி.ஒருவரை உள்ளே அடைக்கக்கூடியவகையில்
அமைக்கப்பட்டிருக்கும்.2 கதவுகள் வைக்கப்பட்டிருக்கும்.ஒருகதவில்8
மற்றயதில் 13 என்றவாறு கூர்மையான ஆணிகள் பொருத்தப்பட்டிருக்கும்.தண்டனை
வழங்குவது மிகவும் சுலபமானது குற்றவாளியை
உள்ளேதள்ளிப்பூட்டிவிட்டாலேபோதும்.உடலின் முக்கியபாகங்களை
துளைத்துவிடும்.உள்ளே குற்றவாளி அசையமுடியாது முக்கியமான அங்கங்களுள் ஆழமாக
கூர்மையான ஆணிகள் குற்றியிருக்கும்.கண்களுக்குள் குற்றுவதற்கேற்றவகையிலும்
ஆணிகள் பொருத்தப்பட்டிருக்கும்.உள்ளே குற்றவாளி அதிகமாக இரத்தம் வெளியேறி
ஒருசில மணித்தியாலங்களில் இறந்துவிடுவான்.1800 இல் ஜேர்மனியில் இது
இருந்தமைக்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
கருத்துரையிடுக Facebook Disqus