0
அவன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான்...



கடவுள் அவன் முன் தோன்றினார்...
"பக்தா!! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டிய வரம் கேள்"
"கடவுளே!! எனக்கு சாகா வரம் வேண்டும்"

"பக்தா!! நான் பல யுகங்களாக கூறி வருவது போல சாகா வரம் மட்டும் கொடுக்க முடியாது. வேறு ஏதாவது கேள்"

"இறைவா!! இந்த பூமியில் தோன்றிய எந்த பொருளாலும்- உயிருள்ளதோ உயிர் அற்றதோ- நான் இறக்க கூடாது"

"அப்படியே ஆகட்டும்!! "
கடவுள் மறைந்தார்!!

அவன் சிரித்தான்..
"எப்படியோ கடவுளை ஏமாற்றி சாகா வரம் வாங்கி விட்டேன். இனி என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது"


தூரத்தில் ஒரு விண்கல் அவன் தலையைக் குறி வைத்து வேகமாக வந்து கொண்டு இருந்தது!! 

கருத்துரையிடுக Disqus

 
Top