0
எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அழகாக்குபவை இனிப்பும் பூக்களும்! பிறந்த நாளோ, திருமண வரவேற்போ... எதற்கும் ஏற்ற அன்பளிப்பு பொக்கே எனப்படுகிற பூங்கொத்து. பூக்களால் செய்யப்படுகிற பொக்கே தெரியும். சாக்லெட் பொக்கே? கார்ப்பரேட் கம்பெனிகளின் வரவேற்பறை, வி.ஐ.பி வீட்டு விசேஷங்கள் என பெரிய இடங்களை அலங்கரிக்கிற சாக்லெட் பொக்கே,
சமீபகாலமாக சாமானிய மக்கள் மத்தியிலும் பிரபலம். விதம்விதமான சாக்லெட் பொக்கே செய்வதில் எக்ஸ்பர்ட் சென்னை, முகப்பேரைச் சேர்ந்த லாவண்யா.

‘‘எம்.ஃபில், எம்.பி.ஏ படிச்சிருக்கேன். பொழுதுபோக்கா சாக்லெட் செய்யக் கத்துக்கிட்டேன். சாக்லெட் பொக்கே பிரபலமாக ஆரம்பிச்ச நேரத்துல, அதையே பிசினஸா செய்யற ஐடியா வந்தது. பூ பொக்கே கொடுக்கிறது நல்ல நாகரிகமா இருந்தாலும், பூக்களை வாட விடறதுல பலருக்கும் உடன்பாடு இல்லை. அதுக்கு பதிலா சாக்லெட் பொக்கே கொடுக்கிறப்ப, அதுல வைக்கிற சாக்லெட் வீணாகறதில்லை’’ என்கிற லாவண்யா, சென்னையின் கார்ப்பரேட் கம்பெனிகள் பலவற்றுக்கும் ரெகுலராக சாக்லெட் பொக்கே சப்ளை செய்கிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘விதம்விதமான சாக்லெட், பூக்கள், சாக்லெட் மற்றும் பூக்களை அடுக்க பிளாஸ்டிக் குச்சிகள், கூடை உள்பட தேவையான பொருள்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதலீடு அவசியம்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?


‘‘வெறும் சாக்லெட் மட்டும் வச்சுப் பண்ற பொக்கேவும் இருக்கு. சிலர் பூக்களும் சேர்ந்திருக்கிற மாதிரி கேட்பாங்க. நட்ஸ் சாக்லெட், பட்டர் ஸ்காட்ச், கிரன்ச்சினு சாக்லெட்ல நிறைய வகைகள் இருக்கு. எல்லாம் சேர்ந்த மாதிரியோ, குறிப்பிட்ட ஒண்ணு மட்டுமோ வச்சும் கேட்பாங்க. கற்பனைக்கேத்தபடி இதுல எத்தனை மாடல் வேணாலும் பண்ணலாம். சாதாரணமா நாம சாக்லெட்டுகளை எத்தனை நாள் வச்சு சாப்பிடுவோமோ, அதே மாதிரி இந்த சாக்லெட்டுகளையும் 8 முதல் 12 மாசங்களுக்கு வச்சு உபயோகிக்கலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘கார்ப்பரேட் கம்பெனிகள்ல ஆர்டர் எடுக்கலாம். இப்பல்லாம் சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல ரிசப்ஷன்ல பூ பொக்கேக்கு பதிலா, சாக்லெட் பொக்கே வைக்கறாங்க. பிறந்தநாள், கல்யாணம்னு எதுக்கு வேணா கொடுக்கக் கூடியதுங்கிறதால, தெரிஞ்சவங்க, நண்பர்கள் மூலமா ஆர்டர் பிடிக்கலாம். 300 ரூபாய்லேர்ந்து, 30 ஆயிரம் வரைக்கும் இருக்கு. ஸ்டேஜ் முழுக்க சாக்லெட்டால டெகரேட் பண்ற அளவுக்கு இன்னிக்கு இது பிரபலம். 100 சதவீத லாபம் தரும் பிசினஸ் இது.’’

சாக்லேட் நிறைய வகையில செய்யலாம்,
1.வகை
டிரிங்கிங் சாக்லேட்- 4டீஸ்பூன்
ஐசிங் சுகர் -4டீஸ்பூன் (டிரிங்க் சாக்லேட்டும்,ஐசிங் சுகரும் ஒரே அளவாக இருக்கவேண்டும்)
கோகோ பவுடர் -1டீஸ்பூன்
மில்க்மெய்ட் -1/2கப்
பால்பவுடர் -2டீஸ்பூன்
பவுடராக உள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சல்லடையில் சலித்த பின், கலந்தது் பிறகு மில்க்மெயிடை சேர்ந்து கலக்க வேண்டும் (மில்க்மெயிடுக்கு பதிலாக தண்ணீரும் சேர்க்கலாம்,தண்ணீர் சேர்க்குபொழுது சிறிது சிறிதாக தெளித்து பிசைய வேண்டும், தண்ணீருக்கு பதிலாக மில்க்மெயிட் சேர்த்தால் சுவைகூடும்) இந்த கலவை கெட்டியாக இருக்கவேண்டும்,சிறிது தளர்வாக இருந்தால் பால்பவுடர் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு தேவையான வடிவத்தில் உருட்டி பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு..பிறகென்ன சாப்பிட வேண்டியதுதான்:)
2.வகை
குக்கிங் மில்க் சாக்லெட்-50gms
குக்கிங் ப்ரவுன் சாக்லெட்-250gms
பாதாம்,வால்நட்,பிஸ்தா-150(மூன்றும் தலா 50}
ஒரு பாத்திரத்தில் தண்ணிரை கொதிக்க விட்டு மற்றொரு பாத்திரத்தில் சாக்லெட் வைத்து உருக விடவும்(double boiling),சாக்லெட் உருகியதும்,வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த நட்ஸ் சேர்க்கவும்.பட்டர் பேப்ரில் ஊற்றவும்.(கப் கேக் ஊற்றும் பேப்பரிலும் வைக்கலாம்)மில்க் சாக்லெட்டை துருவி மேலே சேர்க்கலாம்.

தனியா வெள்ளை, ப்ரவுண் கலர்லயும் பண்ணலாம். அல்லது ரெண்டு கலரும் தெரியவும் பண்ணலாம். இதற்கு தனித்தனியா மெல்ட் பண்ணி பிறகு சேர்க்க வேண்டும்.
குக்கிங் சாக்லேட் கிடைக்காவிட்டால், சாக்லெட் சிப்ஸ் வாங்குங்க. ஃப்லேவர் - விரும்பினது சேர்க்கலாம்.
சாக்லேட் உருகி ரெடியானதும் மோல்ட்ல (கடைல கிடைக்கும். இப்போ க்ளியர் ப்ளாஸ்டிக்ல கிடைக்குது.) ஊற்றி ஆறவிடுங்க. மோல்ட் பாவிக்கிறதானா முதல் கொஞ்சம் உருகின சாக்லேட்டை விட்டு மோல்ட் முழுக்க கோர்ட் பண்ணி வச்சுட்டு நடுவில் நட் வைத்து திரும்ப சாக்லேட் நிரப்பி ஆறவிடவும். (நான் ஃப்ரிஜ்ல வைக்கிறது இல்ல.) ஆறிய பிறகு ஃபாயில் கொண்டு ராப் செய்துவைக்கலாம்.
சாக்லெட்டுக்கென்று குட்டி பேப்பர் கப்ஸ் கிடைக்கிறது.


3.வகை
தே,துருவல்-1கப்
ஐசிங் சுகர்-அரைகப்
மில்க் பவுடர்-அரைகப்
சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒரு பாதாம் வைக்கவும்.மெல்ட் பண்ணிய சாக்லெட்டை ஒரு பேப்பர் கப்பில் ஊற்றவும் அதன் மேல் ஒரு உருண்டை வைத்து அதன் மேலே மறுபடியும் சாக்லெட்டை ஊற்றி செட் பண்ணவும்.
டேட்ஸ் உள்ளே கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி பிரீசரில் ஒரு மணிநேரம் வைத்து செட் செய்து சாக்லெட்டில் டிப் செய்தால் சுவையான டேட்ஸ் சாக்லெட் ரெடி.

கருத்துரையிடுக Disqus

 
Top