0


“மம்மி பிஸ்ஸா போதும்” சிணுங்கினாள் ரேஷ்மா பாப்பா.
“ஆரம்பிச்சிட்டியா, அது வேணும் இது வேணும்னு அடம்பிடிச்சு வாங்க வேண்டியது, அப்புறம் பாதி சாப்பிட்டு வேண்டாம்னு அழ வேண்டியது,
உன்னால மணி வேஸ்ட்.” ரேஷ்மாவின் மம்மி ரேணுகா அர்ச்சனையை ஆரம்பித்தாள்.

“ப்ளீஸ் மம்மி சாப்பிட முடியல, கம்பல் பண்ணினா அப்புறம் சாப்பிட்டு வாமிட் பண்ணிடுவேன் சரியா….” ரேஷ்மா மிரட்டினாள்.

“அம்மாடி தங்கம் விட்டுடு, அதை எடுத்திட்டுப் போய் வேலைக்காரப் பொண்ணு லட்சுமிக்கு கொடுத்திடு.”

“சரி மம்மி…”

வேலைக்காரிக்கும் தான் சாப்பிடும் தின்பண்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் போட்ட டிராமா வழக்கம் போல் சக்ஸஸ் ஆன சந்தோஷத்தில் பாதி பிஸ்ஸாவுடன் துள்ளிக்குதித்து ஓடினாள் ரேஷ்மா.

கருத்துரையிடுக Disqus

 
Top