0
பனி வட்டு
குளிர்ந்த சீதோஷ்ணத்தில், மெதுவாக நகரும் தண்ணீரால் ஏற்படும் அரிய நிகழ்வே பனி வட்டங்களாகும். இந்தப் பெரிய பனி வட்டுகள் தண்ணீரில் மெதுவாக சுழன்றுகொண்டிருக்கும். இது சுழல் நீரோட்டங்களால் உருவாகின்றன என நம்பப்படுகிறது. இந்தப் பனி வட்டங்கள் பெரும்பாலும் ஸ்கான்டிநேவியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன.
ஆனால் 2009 ஜனவரியில் பிரிட்டனிலும் பதிவு செய்யப்பட்டது. ஆற்றின் வளைவுகளில் நீர் வேகமாக ஓடும் போது ஏற்படும் ‘சுழற்சி பெயர்ச்சி’ மூலம் பனிக்கட்டிகள்
துண்டாக்கப்பட்டு பின்னர் நீரோட்டத்தால் அவற்றின் ஓரங்கள் சீராக்கப்படுகின்றன. ஒரு பனி வட்டுசுழலும் போது அது அருகிலுள்ள இன்னொரு பனி வட்டை எதிர்த்திசையில் சுழலப்பண்ணும். இவ்வாறு பல பனி வட்டுக்கள் மெதுவாக சுழல்வது கண்கொள்ளாக்காட்சிதான்.

ஒளித் தூண்கள்
சமதளத்திலுள்ள பனிக்கட்டி படிகங்களிலிருந்து வரும் ஒளிப் பிரதிபலிப்பினால் ஒளித்தூண்கள் உருவாக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் சூரிய ஒளியினால் ஏற்படுகின்றன. எனினும், நிலவொளி மற்றும் தெரு விளக்குகள் போன்ற வலுவான செயற்கை ஒளியினாலும் கூட ஒளித்தூண்களை உருவாக்க முடியும். இவை ஒளி மூலத்துக்கு செங்குத்தாக மேலே அல்லது கீழே நீடிக்கும் ஒளியின் சிறகுபோல மிக அழகாக காணப்படும். சூரிய ஒளியினால் ஏற்படும் ஒளித்தூண்கள், சூரியன் அடிவானத்தில் (பொதுவாக 6 டிகிரி அல்லது அதற்கு மேலாக) இருக்கும் போது ஏற்படுகின்றன. இந்த வண்ணமயமான ஒளித் தூண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி தோன்றும்.

சிவப்பு அலைகள்
கடற்பூண்டு பல்கிப் பெருகுவதாலேயே (பெரியளவான நுண்ணுயிர்களின் செறிவு) சிவப்பு அலை ஏற்படுகிறது. கழிமுகங்கள்,கடல் அல்லது புதிய நீர் வரிசையில், வேகமாகக் குவியும் பாசி அல்லது கடற்பூண்டினால் மேற்பரப்பு நீர் நிறமாற்றம் ஏற்படுகிறது. இது பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. பாசிகள் உயர் செறிவுகளில் உள்ளபோது, தண்ணீர் ஊதாவிலிருந்து இளஞ்சிவப்பு , சிவப்பு அல்லது பச்சையாக மாறுகிறது. எல்லா கடற்பூண்டு பெருக்கங்களும் தண்ணீர் நிறமாற்றம் ஏற்படும் அளவிற்கு அடர்த்தியாக இருப்பதில்லை. அதேபோல எல்லா தண்ணீர் நிறமாற்றத்துக்கும் கடற்பூண்டு
பெருக்கங்கள் காரணமாக இருப்பதில்லை.

அறுகோணப் பாறைகள்
எரிமலைக்குழம்பு ஓட்டம், விரைவாக குளிரும் விளைவாக இந்த பாறைகள் உருவாகின்றன. இந்தப் பாறைகளின் சீரான அறுகோண கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டதான தோற்றத்தைக் கொடுக்கிறது. உலகில் மிகவும் புகழ்பெற்ற அறுகோண கருங்கல் பாறைகள், வடக்கு அயர்லாந்தில் உள்ள இராட்சத பள்ள சதுப்பு நிலத்தில் உள்ளது. இவை செயற்கையாக கட்டப்பட்டது போன்ற தோற்றத்தை உடைய செங்குத்தான அறுகோண பாறைகளைக் கொண்டுள்ளன.

கிரிஸ்டல்(Crystal) சுரங்கம்
கிரிஸ்டல் குகை மெக்ஸிக்கோ நகரில் நைகா (Naica) என்ற சுரங்கத்தில் உள்ளது. இந்த சுரங்கம் மிகப்பெரிய செலினைட் (selenite) படிகங்களைக் கொண்டுள்ளது. இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை படிகங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கேயுள்ள மிகப்பெரிய படிகம், 36 அடி நீளத்தையும், 13 அடி விட்டத்தையும் 55 தொன் எடையையும் கொண்டுள்ளது. இந்த சுரங்கம் 98 அடி நீளத்தையும் 33 அடி அகலத்தையும் கொண்டது. அதிக வெப்பநிலையும் ஈரப்பதனுமுடைய இந்தக் குகையில் சரியான பாதுகாப்பு இல்லாமல் சுமார் பத்து நிமிடங்கள் மட்டுமே மனிதர்களால் இருக்கமுடியும். இது உலகின் ஆச்சரியமான இயற்கை அற்புதங்களில் ஒன்றாகும்.

பனிக் கத்திகள்
இவை Penitentes என அழைக்கப்படும். மிக உயர்ந்த குளிர்ப் பிரதேசங்களில், சூரியனை நோக்கிய உயரமான
மெல்லிய கத்தி வடிவத்தில் பனி உருவாகும். இவை ஒரு மனிதனின் உயரமளவுக்கு இருக்கும். இவை
முதன் முதலில் டார்வினின் இலக்கியத்தில் 1839 இல் விவரிக்கப்பட்டன.

கருத்துரையிடுக Disqus

 
Top