0

சொட்டுநீர் பாசன முறை என்பது முதன்மை குழாய், துணை குழாய் மற்றும் பக்கவாட்டு குழாய் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை. ஓவ்வொரு விடுகுழாய்/உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது,

உமிழி வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்தானது, வேர் பகுதியில் இருக்கும் மண்ணில், புவி ஈர்ப்பு மற்றும் நுண்புழை சக்தி மூலம் உள்ளே செல்கிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்ட உடனேயே, பயிர் நீர் நெருக்கடியிலிருந்து தவிர்க்கப்பட்டு, தரம் மேம்பட்டு போதுமான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்க வழிவகுக்கிறது.

மாதிரி சொட்டுநீர்ப்பாசன வடிவமைப்பு

நீர் (மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம்), மிக வேகமாக குறைந்து கொண்டுவரும் நிலையில், சொட்டு நீர் பாசனம், இன்றைய முக்கியமான தேவையாகும்.

சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்
  • மகசூலை 150 % அதிகப்படுத்தும்
  • சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
  • பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
  • விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
  • உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
  • உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
  • நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
  • ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்
தரிசு நிலங்கள் அதிகரிப்பதற்கு பற்பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் 'தண்ணீர் பற்றாக்குறை' என்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல் முதற் காரணமாகவே இருக்கிறது. ஆனால், வழக்கமான பாசன முறையைக் கைவிட்டு, சிக்கனமாகக் கையாளும் முறைகளைக் கடைபிடித்தால், தண்ணீர் பற்றாக்குறையை எளிதாக சமாளிக்க முடியும் என்பதுதான் அனுபவ விவசாயிகள் பலரும் சொல்லும் உண்மை. அப்படிப்பட்ட நீர் மேலாண்மை முறைகளில் ஒன்றுதான் சொட்டுநீர்ப் பாசனம்! சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அதிக செலவு பிடிக்கும் என்பதால், ஆரம்ப காலங்களில் வசதியுள்ள விவசாயிகளால் மட்டும்தான் இதை அமைக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இதை மாற்றி, சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்குக் குறைந்த விலையில் சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது 'கே.பி. டிரிப்’ நிறுவனம். கிராமப்புற விவசாயிகளின் மேம்பாட்டில் பணியாற்றி வரும், 'இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் எண்டர்பிரைசஸ் இந்தியா’ என்கிற தொண்டு நிறுவனத்தின் கிளை அமைப்புதான், கே.பி. டிரிப். விவசாயிகள் மத்தியில் தண்ணீர். . . 

இன்டர்நேஷனல் டவலோப்மென்ட் என்டேர்ப்ரிசெஸ் (இந்தியா), 29 A , வைத்தியனாதபுரம் மெயின் ரோடு , எல்லிஸ் நகர் , மதுரை 10. அலைபேசி : 96009 44610
கணினி அஞ்சல் : idetn@ide-india.org 
 
Global EasyWater Products Pvt. Ltd.
#16 1, Chinnamuthu, 1st Street, Opp. Prabha Theatre Road, Edayankattu Valasu, Erode-638011. Tamilnadu.
Tel : 91 424-2269689.

கருத்துரையிடுக Disqus

 
Top