பென்குவின்கள் பறக்க இயலா பறவை இனம், தெரிந்ததுதான். இவைகளில் உலகத்தில் 17 விதமான வகைகள் உண்டு பெரும்பாலும் அண்டார்டிகா பனி பிரதேசத்தில் கூட்டமாக வாழும். நீருக்கடியில் இதன் நீச்சல் வேகம் மணிக்கு 24 கி.மீ இதன் துடுப்பு போன்ற கால்களும் றெக்கையும் வேகமாக நீந்த உதவுகிறது.
ராஜ வகை [ Emperor ] பென்குவின் பெயருக்கு ஏற்றார் போல் பிரமாதமான உடல் அமைப்பு கொண்டது. பெரிய தலை மற்றும் நீளமான அலகு கொண்டது. 3.7 அடி உயரமும் 41 கிலோ எடையும் கொண்டது. சிறிய வகை 16 இன்சுகள் தான் இதன் எடை ஒரு கிலோ மட்டுமே.
குடும்பமாக வாழும் விலங்குகளுக்கு சிறந்த உதாரணம் பென்குவின்கள் தான். தாய் பறவை ஒரே ஒரு முட்டையை தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட கடலுக்குள் சென்று விடும். அது கொடுத்த முட்டையை குஞ்சு பொறிக்கும் வரை அதை பத்திரமாக பாது காப்பது மற்றும் மிதமான சூட்டிற்கு தன் கால்களுக்கு இடையே அடைகாக்கும் பவுச் பகுதியில் வைத்துக் கொண்டிருக்கும் தந்தை பறவை. பசியாயினும் பொருமை காக்கும், தாய் பறவை ஏதேனும் உணவு கொண்டுவரும் வரையிலும். குஞ்சு பொறிக்க 60 நாட்கள் வரை அது காத்திருக்க வேண்டும்.
இவற்றின் உணவு மீன்கள், ஸ்கிவிட் எனும் கடல் உயிரி. உணவை லாவகமாக தூக்கி போட்டு பிடித்து சாப்பிடும்.
அண்டார்டிகா உறைபனியில் எப்படி வாழ்கிறது?. இதன் உடல் அமைப்பு அதற்கு தகுந்தார்போல் திடமான கொழுப்பு உடல் கொண்டவை. மேலும் அடர்த்தியான ரோமமும் இதை கடும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது. வால் பகுதியில் ஒரு சிறப்பு உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது இது உடல் நீரால் நனையாமல் வாட்டர் புரூப் போல பாது காக்கிறது.
கருத்துரையிடுக Facebook Disqus