டாப்ளர் பின்விளைவு (Doppler Shifts)
இவ் விளைவின் எளிய விளக்கம். படத்தைப்பாருங்கள் சைரன் ஒலிக்க ஒரு கார் சென்றுகொண்டுள்ளது. ஒலியை கேட்கும் முதலாமவர் நிலை கார் அவரை கடந்து சென்றுவிட்டது. ஒலியானது இவருக்கு கார் ஓட்டுனரை விட குறைவாக கேட்கும். 2ம் நிலையில் உள்ளவருக்கு ஒலியானது கார் ஓட்டுனரை விடவும் அதிகமாக கேட்கும் ஏனென்றால் கார் அவரை நெருங்குகிறது.
டாப்ளர் பிற முக்கிய ஆய்வு:
ஒளி அலைகளின் நீளம் (நீலம் மற்றும் சிகப்பு) மற்றும் ஒலி அளவைக்கொண்டு தொலைவை நிர்ணயிக்கும் முறை. இந்த ஆய்வைக்கொண்டு தான் பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்ற கருத்து வெளியிடப்பட்டது.
டாப்ளர் செய்த ஆய்வு :
அவரின் ஆராய்சி என்னவென்றால் பிளாட்பாரத்தில் இவர் நின்று கொண்டு ரயில் போகும் போது ஒரு இசைக்குழுவை ரயிலின் உள்ளே அமரச்செய்து ஒரே ரிதம் பீட்டில் (குறிப்பொலியை) வாசிக்க வைத்து குறிப்பெடுத்தார்.
(…ஆரம்ப காலங்களில் ரயிலின் வேகம் 30 kmph தான்…)
இதையெல்லாம் பார்பவர்கள் என்ன முட்டாள் தனமான ஆராய்ச்சி என்று ஏளனம் செய்தார்கள்.
இந்த ஆராய்சியின் கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவு (Doppler Shifts) என அழைக்கப்பட்டது.
“டாப்ளர் விளைவு” குறிப்புகளைக் கொண்டுதான் கோள்களின் தொலைவு மற்றும் கேளக்சி களுக்கிடையேயான தொடர்பு என்று விண்ணியலை தவிரவும் 12 அறிவியல் துறைகளில் இவரின் ஆய்வுதான் அடிப்படை.
கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டபோது,அவர் பெரிதும் புகழப்பட்டார் டூ லேட் ! அவர் மறைவுக்குப்பின்னரே (1853).அவர் வாழ்ந்த காலத்தில் இவரின் கண்டுபிடிப்புக்கு வரவேற்பே இல்லை என்று சொல்லவேண்டும். போக்குவரத்து மற்றும் சிக்னல்களின் ஒலி ஒளி உபயம் அவர்தான். பல விபத்துகளை தடுக்கும் இக்கருவிகளின் காரண கர்த்தா.
கருத்துரையிடுக Facebook Disqus