மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த “ESP (Extra sensory perception) ” என இனங்காணப்படுகிறது.இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன… இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)…
முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)… “டைம் ஸ்லிப்” எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்… அது சம்பந்தமாக பின்னர் பார்க்கலாம்….
இப்போது… அடிப்படையில் நாம்… மூளையை தூண்ட எம்மை அறியாமல்… என்ன என்ன செய்கின்றோம் என்பதை பார்ப்போம்…
உதாரணமாக…
நாம் கணக்கு அல்லது ஏதாவது பயிற்சிகள் செய்துகொண்டிருக்கும் போது… செய்யும் முறை நினைவு வராதவிடத்து… பேனாவால்… நெற்றிப்பக்கத்தில் இலேசாகத்தட்டுவதுண்டு (அல்லது விரலால் ஏதோ செய்வோம்.)… அதன் பின்னர், பல வேளைகளில் செய்முறை நினைவுக்கு வந்துவிடும்…
இன்னொரு உதாரணத்துக்கு…
பாடசாலைகளில்… மாணவர் ஒருவர் விடை சொல்லத்தடுமாறும் போது, ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவார் (இதில் சிலர் கொலைவெறித்தனத்தையும் காட்டி விடுவார்கள் )… பின்னர் ஏதோ அரை குறையாக மாணவன் விடையை கிட்டத்தட்ட சொல்லுவான்…
இந்த இரண்டு உதாரணங்களிலுமே… நடப்பது மூளையைத்தூண்டும் செய்கைதான்…
மூளைக்குப்போகும்… இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தும் முறைதான் இது… அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன… இதை அறியாமலே நாம் இந்த முறைகளைப்பின்பற்றி வந்திருக்கின்றோம்… ( அது எப்படி?… இதற்குரிய ஜோசனை… பின்னர் வர உள்ள பதிவுகளில் வரும்.. )
இப்போது… நான் குறிப்பிட்டது போன்று… மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துகையில் புத்துணர்வு பெறும், என்ற கருத்தை நிரூபிப்பதற்கு ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளது…
சில எலிகளின்… மூளையின் குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறிய ஒரு மின் தகட்டை பொருத்தி… மறுமுனையை தயார்ப்படுத்தப்பட்ட மின்கல மிதியுடன் பொருத்தினார்கள்…
எலிகள், அந்த மிதியை மிதிக்கும் போது… மூளையில் மெதுவாக மின் பாய்ச்சப்பட வேண்டும் என்பதே நோக்கம்…
பரிசோதனை எலிகள் அந்த கூண்டினுள்… பல இடங்கள் இருக்கும் போது; மறுபடியும் மறுபடியும் அந்த மிதியிலேயே அவை ஏறிக்கொண்டிருந்தன…
இதிலிருந்து, மின் பாய்ச்சப்படும் போது… உணவைக்கூட கவணிக்காது… 24 மணி நேரமும்…எலிகள் வித்தியாசமான ஒரு உணர்வை பெற்றிருக்கின்றன… அதுதான், மீண்டும் மீண்டும் ஏறின என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஆகவே, மூளையில்… பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணர்ப்பட்டது.
விஞ்ஞான மருத்துவப்படியும்…
4 பில்லியன்ஸ் செல்கள் மூளையில் இருக்கின்றன… ஆனால், நாம் அதில் 10% ம் கூட பயண்படுத்துவதில்லை… ( விஞ்ஞானிகளுக்கும் சாதாரண படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசமாம். )
ஐன்ஸ்டைன் மேலதுகமாக 500 தொடக்கம் 1000 செல்களை பயண்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. ( ஐன்ஸ்டைனின் மூளையில், சாதாரண் மூளையை விட மடிப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.. )
உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்!
அமெரிக்காவில்…
மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்…
பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டொக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…
சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!
கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரண்மாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.
இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.
இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்… அப்போ ஆர் என்பதை பின்னர் பார்ப்போம்.
——————————————————————————————
அடுத்த சம்பவம்…
உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…
( சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்… தெரிந்தவர்கள் பின்குறிப்பில் சொல்லுங்கள். )
நீண்டகாலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.
மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார். முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.
அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது… மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் .. இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.
கடவுள்களும் ESP யும் – ஹனுமார்
இராமாயணம் பலருக்குத்தெரிந்திருக்கும் ( தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்..)..
அதில் குறிப்பிடப்படும் ஒரு கதாப்பாத்திரம் “ஹனுமார்”…
ஹனுமார்… பறக்கக்கூடிய சக்தி கொண்டவாரகவே காட்டப்படுகின்றார்… எனினும் அவர் அந்த சக்தியை முன்னர் உணர்ந்திருக்கவில்லை… ஒருமுறை குறிப்பிட்ட ஒருவரால் ( பெயர் மறந்துவிட்டது ) அந்த சக்தி இருப்பது உணர்த்தப்படுகிறது. அதன் பின்னரே அவர்… இலங்காபுரிக்கு பறந்து செல்வதாக காட்டப்படுகிறது.
இன்னொரு சம்பவத்தில்… இராமரின் தம்பி லக்ஷ்மனனைக்காப்பாற்ற “சஞ்சீவி” மலையில் போய் குறிப்பிட்ட ஒரு மூலிகையை கொண்டுவருமாறு ஹனுமார் பணிக்கப்படுகிறார். உடனே பறந்து சென்ற ஹனுமார்… அங்கு அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியாமையால்… அந்த மலையை அப்படியே தூக்கிவருவதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த கதாப்பாத்திரத்தில் குறிப்பிடப்படும்… ஹனுமார், உண்மையிலேயே ஒரு ESP சக்தி கொண்ட மனிதராக அல்லது தனது மூளையிம் பல செல்களை பயண்படுத்தி அபூர்வ ஆற்றல்களை வெளிப்படுத்தத்தக்க மனிதராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ( எல்லாத்தையும் புணைவுகளுடன் மிகைப்படுத்தி எழுதியமையால் வரலாறுகள் கூட பொய்யாகிப்போவதுண்டு. )
இங்கு நாம் இன்னொன்றையும் கவணிக்க கூடியதாக இருக்கிறது… என்னதான் மலையை தூக்கிகொண்டு பறக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தாலும்… அவரால், அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியவில்லை.
நவீன உலகத்தில் இனங்காணப்பட்ட ESP மனிதர்களும் அப்படித்தான்… குறிப்பிட்ட ஒரு ஆற்றலையே அவர்களால் திறம்பட வெளிப்படுத்த முடிகிறது. (மூளையின் குறிப்பிட்ட பகுதி செல்களின் ஆற்றலை மட்டுமே இவர்களால் தூண்ட முடிகிறது.)
இராமயாண உதாரணத்தை மட்டும் அவைத்துக்கொணு இந்த ESP மனிதர்கள் முன்னர் இருந்தார்கள் என்பதை சிலருக்கு ஏற்க முடியாதிருக்கும்.
எனினும்… எகிப்திய கதைகளில் வரும் தெய்வங்கள், தேவதைகளும் பறக்கும் ஆற்றலைப்பெற்றிருந்ததாக காட்டப்படுகிறது. ( இறக்கை இருந்ததாக சொல்லப்படுவது பின்னர், சாதாரண மனிதர்கள் நம்புவதற்காகவும் லொஜிக்கிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட புணைவுகளாகவும் இருக்கலாம். )
எகிப்திய தெய்வங்களில்… ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பது போன்று காட்டப்படிருக்கிறது. அனைத்தும் கொண்டவர் இல்லை என்பதை இதிலிருந்தும் ஊகிக்கலாம்…
இவை இன்று அறியப்பட்டுள்ள ESP சக்திகளுடன் திறம்பட ஒத்துப்போகின்றது.
டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்… கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருந்தான்.
ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் “எனது நண்பன் “எட்வின்” இறந்து விட்டான் என தோன்றுகிறது” எனக்கூறினான்… இதை நம்ப அத்தை நம்பவில்லை.
அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
( இவரின் முளு விபரத்தை பார்க்கும் போது பல வியப்புக்கள் காத்திருக்கும்… நான் இங்கு அவை அனைத்தையும் குறிப்பிடவில்லை… ஆர்வமுள்ளவர்கள் வாசித்துக்கொள்ளவும். )
ஒரு முறை பல ஆள்மன சக்கிதி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்… இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட ; கடுப்பாகிப்போன ஹியூம்… ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு… தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சையாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.
பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்!!! பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்!!!
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம். இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே. பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்.
மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகள்(?) உம் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில(9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார். ( இப்படியான பல சக்கிதகளைக்கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வாண் சக்திகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்
கருத்துரையிடுக Facebook Disqus