மூலப் பொருட்கள்:
எரிகட்டி தயாரிக்க தேவையான மரக்கழிவுகள் தேவையற்ற வேஸ்ட் பேப்பர்கள் மற்றும் கார்டு போர்டுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள், புளியின் மேல் ஓடு, கடலைத்தோல், புற்கள், வைக்கோல்கள், மரத்தின் அடிபாகங்கள், கரித்துண்டுகள், மரத்தூள் போன்ற பொருட்கள்தான் , மரங்கள் வெட்டி விற்கும் விவசாயிகளிடமும், கடலை உற்பத்தி இடங்களிலும், டீ, காபித்தூள் கழிவுகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், மரத்தூள் மர அரவை மில்களிலும் கிடைக்கும். இலை, தழை போன்றவற்றை கிடைக்கும் இடங்களில் பெறலாம். இத்தொழிலுக்கான மூலப் பொருட்கள். மூலப் பொருட்களை காய வைக்க வெயில் மிகவும் தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் ஆரம்பிக்க இயலாத தொழில். பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு முறை:
மூலப் பொருட்களை நன்கு காய வைத்து, சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது 4,500 கலோரி வெப்பத் தரத்தை கொடுக்கும் அளவில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் கொடுத்தால் 60, 90 டயாமீட்டர் என தேவையான அளவில் குழாய் புட்டு வடிவத்தில் எரிகட்டி கிடைத்துவிடும். இதனை அப்படியே பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயார்.

கட்டடம்:
இந்த எரிகட்டியைத் தயாரிக்க 2,500 சதுர அடி இடம் தேவை. எரிகட்டி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளை காய வைக்க 25-30 சென்ட் இடம் தேவை. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இடம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு.

இயந்திரம்:
இத்தொழிலுக்கான இயந்திரத்தின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பவானி, சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது. இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் சுலபம். ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.

மானியம்:
எரிகட்டித் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. முதலீட்டுத் தொகையில் 35% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நேரடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கிக் கடனில் கழித்துக் கொள்வார்கள். வங்கியில் மானியத் தொகை இருப்பு இருக்கும் வரை, அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.

முதலீடு
குறைந்தபட்சம் அரை ஏக்கர், அதிகபட்சம் முக்கால் ஏக்கர் இடம். 2 செட்டுகள் போட வேண்டும். மணிக்கு 250 கிலோ உற்பத்தி செய்யும் எரிகட்டி தயாரிப்பு இயந்திரம் 7.5 லட்சம், 1.5 டன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ரூ. 18 லட்சம். கிரைண்டர் இயந்திரம் ரூ. 3 லட்சம். டிரையர் ரூ. 5 லட்சம். தினசரி 5 டன் உற்பத்தி வீதம், மாதம் 30 நாளில் 150 டன் எரிகட்டி தயாரிக்கலாம். இதை உற்பத்தி செய்ய 200 டன் மரக்கழிவுகள் தேவை. மரக்கழிவுகள் டன் ரூ. 1200 முதல் ரூ. 1750 வரை விற்கிறது. அதிகபட்ச விலை ரூ. 1700 என்றால் 200 டன்னுக்கு 3.4 லட்சம் தேவை. ஒரு டன் உற்பத்தி செய்ய ஆள் கூலி, மின்சாரம், இயந்திர தேய்மானம், இட வாடகை ஆகியவற்றுக்கு ரூ. 600 செலவாகும். மாதம் 150 டன்னுக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. உற்பத்தி முதலீட்டிற்கு மாதம் ரூ. 4.30 லட்சம் ஆகிறது.
மாதம் ரூ. 2 லட்சம் லாபம்
உற்பத்தி செய்யப்படும் எரிகட்டி டன் ரூ. 3800 முதல் ரூ. 4200 வரை விற்கிறது. இதன் மூலம் 150 டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 5.7 லட்சம், அதிகபட்சம் ரூ. 6.3 லட்சம் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதத்துக்கு குறைந்தபட்ச லாபம் ரூ. 1.4 லட்சம், அதிகபட்சம் ரூ. 2 லட்சம். கொள்முதல் செய்யப்படும்

சந்தை வாய்ப்பு:
அதிகரித்து வரும் எரிவாயு விலையேற்றத்தால் மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் ஓடும் காலமிது. பெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்கள், டீக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் அடுப்புகளை நம்பி இருக்கின்றன. இந்த அடுப்புகள் எறிய வேண்டுமெனில், விறகு மற்றும்
மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, வேறு இடங்களிலிருந்து இதை கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் அதிக எரிசக்தி தருவது இந்த எரிகட்டியின் ஸ்பெஷல் அம்சம். இரண்டு கிலோ விறகு எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி, ஒரு கிலோ எரிகட்டியை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தவிர, இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், தற்போது இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. பெண்கள் எளிதாக இத்தொழிலை செய்ய முடியும் என்பது இத்தொழிலில் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி.

வேலையாட்கள்:
மூலப்பொருட்களைக் காய வைக்க, இயந்திரத்தை இயக்க, பேக்கிங் செய்ய என இங்கே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தித்திறனுக்கு மொத்தம் இருபது நபர்கள் தேவைப்படுவார்கள்.
சூப்பர்வைசர் – 1
திறமையான வேலையாட்கள் – 5
சாதாரண வேலையாட்கள் – 14
மின்சாரம்:
ஒரு நாளைக்கு முழு உற்பத்தித் திறன் பயன்பாட்டிற்கு 504 யூனிட்களுக்குமேல் மின்சாரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து மணிநேரம் இயந்திரத்தை இயக்க வேண்டி வரும்.
பிளஸ்:
மாற்று எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்து வருவது இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. மேலும், காடுகளை அழித்து விறகுகள் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்யும் பட்சத்தில் எரிகட்டிக்கானத் தேவை மேலும் அதிகரிக்கும்.

ரிஸ்க்:
தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மரம் அறுக்கும் மில்களில் இருந்து மொத்தமாக மரத்தூளை வாங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை எனில் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பிறகு இறங்கவும்.

மார்க்கெட்டிங்:
அலைந்து திரிந்து ஆட்களைப் பார்க்க வேண்டும் என்பதைவிட, எரிகட்டி தயாராகத் தயாராக உடனடியாக வாங்கிக் கொண்டு போகும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக சந்தை வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு சென்று எரிகட்டியின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறி ஆர்டர்களை பெறலாம்.
சுய உதவிக் குழுப் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்த தொழிலில் சுலபமாக இறங்கலாம்

பயன் | : | தென்னை நார்க்கழிவு துகளட்டை தயாரிக்க பயன்படுகிறது. |
திறன் | : | அமையவிருக்கும் ஆலையைப் பொறுத்தது. |
விலை | : | ரூ. 2 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும் |
அமைப்பு | : | நார்த்தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் தென்னை நார்க்கழிவு சுற்றுப்புறம் மாசுபடுதலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ளஊறுவிளைவிக்கும். இது லிக்னோ செல்லுலோஸ் அதிகம் உள்ள பொருளாக இருப்பதால் இதிலிருந்து துகளட்டை தயாரிக்கப்படுகிறது. துகளட்டை தயாரிக்க பீனால் பார்மால்டிஹைடு (16%) அல்லர் யூரியா பார்மால்டிஹைடு (20%) பசையாக ள பயன்படுகிறது. நார்க் கழிவும் பசையும் நன்கு கலந்து விரும்பிய ளதடிமன் அளவிற்கு 120 செல்சியஸ் 15 முதல் 20 நிமிடத்திற்கு வெப்பத்தில், அழுத்தப்படுகிறது. அட்டையில் உருவாக்கப்பட்ட முனை மற்றும் வேண்டாத பகுதிகள் வெட்டிவிடப்படுகிறது. இந்த அட்டை மேஜையின் மேல் பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். இந்த நார்க்கழிவு அட்டைக்கு நீர் உறிஞ்சும் மற்றும் விரிவடையும் திறன் அதிகமாகும். |
சிறப்பு அம்சங்கள் | : | தென்னை நார்க்கழிவிற்கு தகுந்த பயன்பாடு மேஜையின் மேற்பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடுகளுக்கு அட்டை மிகவும் பயன்படுகிறது. |
பயன் | : | தென்னை நார்க்கழிவிலிருந்து எரிகட்டி தயாரித்தல் |
திறன் | : | மணிக்கு 125 கிலோ |
விலை | : | ரூ. 45,000 /- |
அமைப்பு | : | இந்த இயந்திரம் உட்செலுத்துவான், ஒருமுனையில் தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு, பீப்பாய் அமைப்பு. அச்சு பிழியும் குழுல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்திருகுத்தண்டு பால் பேரிங்கால் ஒருமுனையிலும், மற்றொரு முனை தாங்கப்படாமலும் உள்ளது. பீப்பாய் அமைப்பானது திருகுத்தண்டினால் மூடப்படும். தாங்கியின் மேல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஒரு முனை தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு இதன் நீளவாக்கிலும், அச்சு பிழியும் குழலும், 30 செ.மீ நீளமாக இருக்கும். திருகுத்தண்டானது நேரடியாக குறைக்கும் கியரில் இணைக்கப்பட்டிருக்கும். இது 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டாரினால் இயக்கப்படுகிறது. தென்னை நாாக்கழிவும் சாணமும் போன்ற விகிதத்தில் தேவையான அளவு நீருடன் கலந்து கட்டியாக வெளியெடுத்து உலர வைத்து எரிகட்டியாக உபயோகப்படுத்தப்படுகிறது. |
சிறப்பு அம்சங்கள் | : | தொடர்ச்சியாக எரிகட்டி பிழியும் இயந்திரம். எரிகட்டியின் எரி திறன் கிலோவிற்கு 3000 கிலோ காலரி ஆகும். தொழிற்சாலைகளுக்கு மிகவும் ஏற்றது. |
Real Tech Engineering
No. 172-C, Jayaprakash Nagar,
3rd street, Sanganoor Road,
Ganapathy (PO),
Coimbatore - 641006
Tamil Nadu, India.
Phone : 0422 - 2333297
Mobile : +91 - 9843642151
E-Mail : realtechengg@gmail.com
Mr. M. Muthuswamy
No. 32, 8th Street, Ganesh Layout, Ganapathy
Coimbatore, Tamil Nadu - 641 006, India
Telephone: +(91)-(422)-2330137/ 2330081

Improved Smokeless Chulhas:
A Guide to Trainees. N. Jeyabal Krishnan
& K. R. Swaminathan,
Technical back-up support unit, Bio-energy
Department,
Tamilnadu Agriculture University, Coimbatore
கருத்துரையிடுக Facebook Disqus