அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.
திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. அவ்வாறு நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
மேலும் வாழ்க்கையை மனைவி/கணவருடன் சந்தோஷமாக எங்கேயும் சுற்றி அனுபவிக்க முடியாது. குறிப்பாக குடும்பத்தை சரியாக நடத்த எந்த ஒரு திட்டத்தையும் ஒழுங்காக போட முடியாது. அதுவே 25 வயதில் நடந்தால், மனைவி/கணவரோடு சந்தோஷமாக ஊர் சுற்றி, நன்கு அனுபவித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, குடும்பத்தை எப்படியெல்லாம் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்று எதையும் யோசித்து செய்ய முடியும்.
திருமணமானது 25 வயதில் நடந்தால் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, ஒரு மனபக்குவத்திற்கு வர முடியும். மேலும் நண்பர்களுடன் எங்கேனும் இருவரும் ஒன்றாக சென்று விட்டு எந்த நேரத்திலும் வீட்டிற்கு வரலாம். அப்போது யாரும் எந்த தடையும் போட முடியாது. ஏனெனில் அப்போது நீங்கள் புதுமணத் தம்பதியர்களாகவே தெரிவீர்கள். ஆகவே எவரும் தடைவிதிக்க முடியாது.
மேலும் உங்கள் சந்தோஷத்திற்கு எந்த இடையூறும் இருக்காது.
மேலும் இந்த வயதில் திருமணமானது நடந்தால், ஒரு 30 வயது ஆகும் போது உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். குடும்பத்தை எப்படி நடத்தினால், எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நன்று புரியும். இருவரும் தவறு செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு சொல்லி, உங்களது தவறை திருத்துவார்கள். சொல்லப்போனால் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அது பிற்காலத்தில் உங்களது குழந்தைக்கு சொல்லிப் புரிய வைக்க உதவியாகவும் இருக்கும்.
30 வயதில் திருமணம் செய்தால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிடுவீர்கள். முக்கியமாக சொல்லப் போனால், அவர்கள் காலேஜ் வரும் போது உங்களுக்கு 50 வயதாகியிருக்கும். அந்த வயதில் வேலைக்கு செல்வது என்பது சற்று கடினமான விஷயம். உடல் நிலையும் அதற்கு ஒத்து போகாது. மேலும் அந்த வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும்.
ஆகவே திருமணம் செய்ய சரியான வயது 25 தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். என்ன நண்பர்களே! நீங்க எப்ப திருமணம் செய்யலாம்-னு இருக்கீங்க!
இன்னமும் நீ ஏன்டா கல்யாணம் பன்னுலனு எண்ண கேக்காதீங்க