காட்டுன் கதாப்பாத்திரமான டின்டின் கார்ட்டூன் படம் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அ932ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் வெளிவந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் வெளியானது இப் படம். இதற்கு டின்டின் இன் அமெரிக்கா எனப் பெயரிட்டிருந்தனர்.


கவ்பாய் ஒருவர் பாறை மீது தனது நாயுடன் உட்கார்ந்து இருப்பது போலவும், அவருக்கு அருகே 3 இந்தியர்கள் நிற்பது போலவும் அப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தை ஹெர்ஜி என்ற ஓவியர் வரைந்தார். இது 1934-ம் அண்டு காமிக் புத்தகத்தின் முதல் எடிசனில் வெளியானது. சமீபத்தில் இந்த கார்ட்டூன் படம் பாரிஸ் நகரில் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து அது ரூ. 9 கோடிக்கு ஏலம் போனது.

இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு மற்றொரு டின்டின் கார்ட்டூன் ஏலம் விடப்பட்டது. அப்போது அது ரூ. 4 கோடிக்கு ஏலம் போனது. தற்போது இந்த டின்டின் கார்ட்டூன் ஓவியம் பழைய ஓவியத்தை மிஞ்சி கூடுதல் விலைக்கு ஏலம் போயுள்ளது.

இப்படத்தை காங்கோ நாட்டில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது ஆப்பிரிக்கர்கள் மீது இனவெறியை தூண்டுவது போல் உள்ளது என காங்கோவைச் சேர்ந்த ஒருவர் பெல்ஜியம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் அதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்து விட்டது.
அதை தொடர்ந்து பாரீசில் ஏலம் விடப்பட்டது.
 
Top