அழகுப் பெண்களும் ஹேண்ட்ஸ்சம் ஆன ஆண்களும்
மட்டும்தான் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரவேண்டுமா என்ன?
விலங்குகளும் கூட நிகழ்ச்சித் தொகுப்பாளராக முடியும் என்று
சொல்லியிருக்கின்றனர் என்.பி.சி சேனல்காரர்கள்.
இதைத் தொடர்ந்து நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளையும் களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
சினிமா நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது செய்தி அல்லதான். என்றாலும் சினிமாவில் நடித்த குரங்கு ஒன்று சின்னத்திரைக்கு வந்திருப்பது செய்திதானே.