இவ்வாறு தூக்கி எறியப்படும் போன்களில் உள்ள பேட்டரிகளில், நச்சுத் தன்மை இருப்பதால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. பின்லாந்து நாட்டில், இந்த பிரச்னை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், அங்குள்ள நதிகளில், ஏராளமான மொபைல் போன்கள், தூக்கி எறியப்படுகின்றன. இவற்றில் உள்ள பேட்டரிகளில் இருந்து பரவும் நச்சுத் தன்மையால், நதிகளின் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது.
இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காகவும், இதுகுறித்து< மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அங்குள்ள ஒரு அமைப்பு, கடந்த சில ஆண்டுளாக, மொபைல் போனை வீசி எறியும் போட்டியை நடத்துகிறது.
பொதுமக்கள், தங்களிடம் உள்ள, பயன்படுத்தாத அல்லது கோளாறான மொபைல் போன்களை, இந்த போட்டியில் பங்கேற்று, தூக்கி எறியலாம். யார், அதிக தூரத்துக்கு வீசுகின்றனரோ, அவர்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இவ்வாறு தூக்கி எறியப்படும் மொபைல் போன்கள் அனைத்தும், சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக, இந்த போட்டிக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.