பிரேசில் நாட்டின், சாவோ-போலோ (Sao Paulo) நகர் என்றாலே, தெளிவான நீலக்கடலும், அருமையான கடற்கரைகளும்தான், பிரேசில் நாட்டு உல்லாசப்பயண விளம்பரங்களில் இடம்பெறும். அவர்கள் சொல்லாத ஒரு விஷயம், சாவோ-போலோ நகரின் மோசமான ட்ராஃபிக்.
நம்மூரில் இல்லாத ட்ராஃபிக்கா என்று நினைக்காதீர்கள். இது அதைவிட மோசம். கீழேயுள்ள போட்டோவில் ஒரு சாம்பின் பார்த்துவிட்டு அடுத்தடுத்த போட்டோக்களுக்கு வாருங்கள்.



மொத்தம் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் மெட்ரோ சாவோ-போலோவில், ஆபீஸ் நேரங்களில் சராசரி ட்ராஃபிக்கின் மொத்த நீளம் 112 மைல்கள் என்று கணிப்பிட்டிருக்கிறார்கள். இது சாதாரண தினம் ஒன்றுக்கு! காலநிலை அப்படி இப்படி மாறினால், ட்ராஃபிக் இன்னமும் மோசமடையும்.
சாவோ-போலோ நகரை லோக்கல் ஆட்கள் அழைக்கும் பெயர், Cidade da Garoa. அதன் அர்த்தம், மழைத் தூறல்களின் நகரம். எந்த நிமிடமும் மழை தூறக்கூடிய இந்த நகரத்தில், மழை பெய்தால் சராசரி ட்ராஃபிக்கின் மொத்த நீளம் 183 மைல்கள்! அதை ஏரியல் வியூவில் பார்க்க வேண்டாமா.. பாருங்கள்.

ஒவ்வொரு தினமும் அதிகாலை 4.30 மணிக்கே ட்ராஃபிக் ஆரம்பமாகி விடுகிறது. இரவு 9 மணிவரை நீடிக்கிறது. 8 மணி நேரம் அலுவலகங்களில் பணி புரிபவர்கள், பணிக்குச் செல்லும்போதும், வீடு திரும்பும் போதுமாக சேர்த்து சராசரியாக 6 மணி நேரத்தை வீதியில் செலவிடுகிறார்கள் என்கிறது ஆய்வு.

இன்று சாவோ-போலோவில் சக்கை போடு போடுவதே, 24 மணிநேரமும் காலநிலை அறிவிப்பு செய்யும் ரேடியோ சேனல்தான். இந்த சேனல், ஒவ்வொரு வீதியிலும் ட்ராஃபிக் எவ்வளவு நீளமாக உள்ளது என கூறிக்கொண்டு இருப்பதுடன், எந்த வீதியூடாக சென்றால், ட்ராஃபிக் குறைவாக உள்ளது என்றும் கூறிக்கொண்டே இருப்பதால், மவுசு ஜாஸ்தி.
 

இந்த வாரத்துக்கு 7 நாள், தினமும் 24 மணி நேர ரேடியோவில், முக்கிய வீதிகளில் நிருபர்களையும், நகருக்கு மேலே ஒரு ஹெலிகாப்டரையும் பறக்கவிட்டு, ட்ராஃபிக் ரிப்போர்ட் கொடுக்கிறார்கள்.

சரி. உலகளவில் மிக மோசமான ட்ராஃபிக் உள்ள முதல் 10 நகரங்களில், இரு இந்திய நகரங்கள் உள்ளன என்பது தெரியுமா?

உலக அளவில், பெங்களூரு 6-வது, இடத்திலும், புது டில்லி 7-வது இடத்திலும் உள்ளன. அதன் அர்த்தம், இந்த இரு நகரங்களிலும் உள்ள ட்ராஃபிக், நியூயார்க் ட்ராஃபிக்கைவிட மோசமாக உள்ளது! (பட்டியலில் நியூயார்க் 15-வது இடத்தில் உள்ளது)


 
Top