மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஸ்விம்மிங் பூல், தனித்தனி லிப்டுகள், ஹெலிபேட், கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏர்-கண்டிசனிங், சிஸ்கோ நெட்வோர்க்குடன் கூடிய வசதிகள், நீரை ரீ-சைக்கிள் செய்யும் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
உலகின் முன்னணி கட்டடவியல் நிபுணர்கள் இணைந்து இந்தக் கட்டடத்தை உருவாக்கி வருகின்றனர்.