இந்த குழந்தை, தங்களுக்கு பிறந்தது தானா என்பதை அறிந்து கொள்வதற்காக, மரபணுச் சோதனைக்கு <உட்படுத்துகின்றனர். ஆய்வு முடிவுகள், சில நாட்களுக்கு பின், மின்னஞ்சலிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கப் படுகிறது.
இந்த சோதனையை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு, 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில், தினமும் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது.
வாகனத்தில் இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு, அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. "இந்த வாகனத்தால், ஏராளமான தம்பதிகளுக்கு இடையே, தேவையற்ற மனக் கசப்பு ஏற்படுகிறது...' என, சமூக ஆர்வலர்கள் புகார் கூறினாலும், நாளுக்கு நாள், இதற்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.