ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் (Ford Motor Company) கார்களில், டச்-ஸ்கிரீன் கன்ட்ரோல் சிஸ்டம் (touch-screen control system) உபகரணங்களை இணைக்கத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன.


ஃபோர்ட் கார்களின் விற்பனையை பூஸ்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், விற்பனையை தள்ளாட வைத்திருப்பதைப் பார்த்து திகைத்துப் போயுள்ளது ஃபோர்ட் மோட்டார் கம்பனி.

 
காரணம், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை வாங்கிய கஸ்டமர்கள், தலையைப் பிய்த்துக்கொண்டு கார் ஓட வேண்டிய நிலைக்கு கொண்டு போயிருக்கிறது இவர்கள் பொருத்தியுள்ள சிஸ்டம்.

ஃபோர்ட் கார்களில் பொருத்தப்பட்டுள்ள டச்-ஸ்கிரீன் சிஸ்டத்துக்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், MyFord Touch. உண்மையில், முற்று முழுதாக இவர்களால் உருவாக்கப்பட்ட சிஸ்டம் அல்ல இது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்புமாக இணைந்து உருவாக்கியதே, MyFord Touch.

தமது போட்டியாளர்களான ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தத்தமது கார்களில், டச்-ஸ்கிரீன் சிஸ்டத்தை அறிமுகம் செய்யத் துவங்கியதை அடுத்து, ஃபோர்ட் பல மில்லியன் செலவில் டெவலப் செய்துள்ள இந்த சிஸ்டம், போர்ட் கார்களுடன் சரியாக இன்டர்கிரேட் பண்ணவில்லை என்கிறார்கள், இதில் விஷயம் அறிந்தவர்கள்.

கஸ்டமர்கள் செய்யும் கம்பிளெயிட்டுகளில் பெரும்பாலானவை, கார் ஓடிக்கொண்டு இருக்கையிலேயே டச்-ஸ்கிரீன் சிஸ்டம் இயங்குவதை நிறுத்தி, சுயமாகவே ரீ-பூட் செய்யத் தொடங்குகிறது என்பதே. இது காரைச் செலுத்தும் சாரதிகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

வாகனம் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ஹை-வேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிரேயுள்ள பானலில் அனைத்தும் பிளாக்-அவுட் ஆகிப் போனால், சாரதியின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்.

ஆக்ரன் ஒஹாயோவைச் சேர்ந்த முன்னாள் கார் ரேஸ் க்ரூ சிஃப் மைக்கல் ஹின்னர், “மற்றைய போட்டி நிறுவனங்கள் டச்-ஸ்கிரீன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவுடன் இவர்களும் (ஃபோர்ட்) அவசரப்பட்டு தமது கார்களில் பொருத்திய அவரச முயற்சி இது. புதிய சிஸ்டத்தின் இயங்கு திறனைவிட, அதன் பாஷன்-லுக் மீதே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதுதான் இப்போது சிக்கலாகி விட்டது” என்கிறார்.

ஃபோர்ட் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வரும் MyFord Touch சிஸ்டத்தைப் பார்த்த தமது மனைவி, அதன் பாஷன்-லுக் காரணமாகவே ஃபோர்ட்-எட்ஜ் லிமிடெட் எடிஷன் மாடல் கார் ஒன்றை வாங்கியதாக மைக்கல் குறிப்பிடுகிறார்.

“அந்த வகையில் ஃபோர்ட்டுக்கு வெற்றிதான். அவர்களது புதிய டச்-ஸ்கிரீன் சிஸ்டத்தில் ஸ்டைல் பெண்களை அதிகம் கவர்ந்தது. விற்பனை எகிறியது. ஆனால், இயல்பிலேயே பதட்டம் அதிகமுள்ள பென் டிரைவர்கள், காரைச் செலுத்திக் கொண்டு இருக்கும்போது, தமக்கு முன்னால் உள்ள சிஸ்டம் முழுமையாக நின்று போவதைக் கண்டு மிரள்கிறார்கள். எனது மனைவி, இந்தக் காரே வேண்டாம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்” என்கிறார்.
டச்-ஸ்கிரீன் சிஸ்டம் காரணமாக ஃபோர்ட் கார்களின் விற்பனை, இந்த வருடத் துவக்கத்தில் இருந்து சரியத் தொடங்கியுள்ளது.
தற்போது ஃபோர்ட், தமது சிஸ்டத்த மேஜர் அப்கிரேட் ஒன்றை செய்துகொண்டு இருப்பதாக நேற்று (செவ்வாய்கிழமை) அறிவித்துள்ளது. இந்த புதிய அப்கிரேட், MyFord Touch சிஸ்டம் கிராஷ் ஆவதை தடுக்கும் என்றும் நேற்றைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே விற்பனையான கார்களில் உள்ள சிஸ்டத்தை இலவசமாக மாற்றிக் கொடுப்பார்களா என்ற அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
ஒருவேளை புதிய அப்கிரேட்டிலும் ஏதாவது சிக்கல் உள்ளதோ!

 
Top