"PING" என்பது Packet Internet Groper என்ற சொற்களின் சுருக்கமாகும். இவை நமது கணினியின் நெட்வொர்க்கில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிய பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இன்டர்நெட் முகவரிக்கு (I P Address )தகவல் பாக்கெட்களை பிரச்சனையின்றி அனுப்ப முடிகிறதா என்பதினை கண்டறிய இந்த Ping புரோகிராம்களை பயன்படுத்தலாம்.  PING என்ற கட்டளை சொல்லுடன் நெட்வொர்க் அட்ரஸ் ஒன்று இணைத்து கட்டளை வரி அமைத்து இதனை கணினிக்கு அனுப்பலாம்.
நாம் அனுப்பும் கட்டளையை கணினி ஏற்றுக்கொண்டால் உடனே அது "PONG " என்ற ஒரு பதிலினை அனுப்பும்.  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு  இடையே மேற்கொள்ளப்படும் நேரத்தை கணக்கெடுத்து சராசரி பாக்கெட் அனுப்பும் நேரம் கணக்கிடப்படும்
இந்த "PING" கட்டளையானது சரியான முறையில் கணினி பெற்று முறையான வழியில் பதிலினை கிடைக்கப்பெறாவிட்டால் Time Out Error என்ற ERROR செய்தியினை காட்டும். இதனை எவ்வாறு கணினியில் செயல்படுத்தி பார்ப்பது என பார்க்கலாம்.


படி  1:
          Start பட்டனை கிளிக் செய்து  ----> Run-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
படி  2:
RUN பெட்டி திறந்த உடன் அதில் "cmd" என டைப்  செய்து  OK பட்டனை அழுத்த வேண்டும்.

படி  3:    
         இப்பொழுது  MS DOS Prompt-ல் படத்தில் உள்ளதுபோல்  “ping 192.168.1.1”     
         டைப் செய்து  [Enter]        பட்டனை அழுத்த வேண்டும்.

                             
படி 4:
         இப்பொழுது "PING" புள்ளி விவரங்களை அறியலாம். இது போன்ற பதில்        
         கிடைக்கும் : Sent =4,  Received =4, Lost = 0 (0% loss). (படத்தினை பெரிதாக்கி   
         பார்க்கவும்).
             
                                      

நமது பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்று புகார்  பதிவு செய்தால்  நமது இன்டர்நெட் சாதனங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா  என  பரிசோதித்துவிட்டு பின்பு பிங் கமாண்ட் ஒன்றினை சொல்லி அதனை  டாஸ்(DOS) ப்ராம்ப்ட்டில்   தர சொல்வார்கள். இதன் மூலம் இணையத் தொடர்பிக்கும் நமது கணினிக்கும் சரியான முறையில் இணைப்பு உள்ளதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 
எடுத்துகாட்டாக PING 192.168.1.1 என்பது அந்த கட்டளையாக இருக்கலாம். இதனை கொடுத்தால் கம்புட்டர் பதில் தரும் பாக்கெட் மற்றும் எடுத்துகொள்ளும் நேரம் போன்றவைகள் நமக்கு இறுதியாக கிடைக்கும். இணைப்பு சரியில்லை எனில் இந்த பதில் கிடைக்காது.
 
Top