
"அந்த நாட்களில்" பெண்களின் ஹார்மோனில் மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களின் மனநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டு சிடுசிடுவென இருப்பார்களாம். ( அட யார்ரா இவன் எங்க பொண்டாட்டியெல்லாம் எப்பவுமே சிடுசிடுவெனதான் இருப்பார்கள் என்று சொல்லுபவர்கள் எல்லாம் ஒரு ஒரமாக ஒதுங்கி கொள்ளுங்கள் நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அந்த கடவுளே வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது )அந்த நேரத்தில் ஆண்கள் ( கணவன், காதலன், தோழர்கள் ) தங்கள் வாயை திறந்து ஏதாவது பேசி வாங்கி கட்டி கொள்வது என்பது அநேக இடத்தில் நடப்பதுதான். சில நேரங்களில் வாங்கி கட்டி கொள்வதுமட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய சம்பவங்களும் ஏற்படும். அதனால் அந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும் என்பது பற்றி நான் படித்ததை உங்களுக்கு இங்கு அட்வைஸாக தருகிறேன்.
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அல்லது அவர்களை பார்த்ததும்
என்ன டின்னர் இன்று ரெடி பண்ணியிருகிறாய் என்று கேட்டால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் இன்று டின்னர் ரெடி பண்ண நான் உதவுகிறேன் என்று சொன்னால் அது பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் இன்று எந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் என்று கேட்டால் அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)
அடுத்தாக
ஓ.....நீ அந்த வீணாப்போன நைட்டியை போட்டு இருக்கிறாயா என்று சொன்னால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் இந்த ரெட்கலர் நைட்டி நன்றாக இருக்கிறது உனக்கு என்று சொன்னால் அது பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் டையர்டாக இருக்கும்போது மிக அழகாக இருக்கிறாய் என்று சொன்னால்அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)
இந்த இதை சாப்பிட்டு தொலை என்று சொன்னால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் இந்தா இந்த ஆப்பிளை சாப்பிடு என்று சொன்னால் அது பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் இந்தா (ஒயின் அருந்து இது இந்த கால பெண்களுக்கு மட்டும்) சூடான ஹார்லிக்ஸ் அருந்து என்று சொன்னால்அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)
இன்று முழுவதும் சும்மா டிவியே பார்த்திட்டு இருந்தாயா என்று கேட்டால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் நீ ஒன்றும் அதிகம் வேலை செய்யவில்லையே என்று கேட்டால் அது பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் இந்த ஷோபாவில் உட்கார்ந்து நீ டிவி பார்ப்பதே தனி அழகு ஐ லவ் யூடா கண்ணா இருக்கிறாய் என்று சொன்னால்அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)
மக்களே நான் முன்றாவதாக சொல்லி இருக்கும் மிகமிக பாதுகாப்பு(SAFEST) ரூலை நீங்கள் எப்போதும் கடைபிடித்தால் உங்கள் உயிருக்கு பயப்படத் தேவையில்லை அது மட்டுமல்லாமல் உங்கள் துணைவியின் அன்பு என்றும் உங்களுக்கு கிட்டும்.