ஆடி பாடி ஓடி உழைத்து வரும் மனிதர்களுக்கு வீடு சரணாலயம் என்பது போல குடும்ப பிரச்சனைகளில் உழண்டு உறங்க வரும் தம்பதிகளுக்கு படுக்கை அறை என்பது சரணாலயம்..நாள் முழுவதும் உழைத்து சக்தியை இழந்த நமக்கு நமது உடலை ரீஜார்ஜ் செயும் இடம் இந்த படுக்கை அறை ஆகும்.
இந்த படுக்கை அறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் தங்கள வீட்டில் வரவேற்பு அறையை அழகாவைத்திருப்பார்கள். இது வீட்டில் வரும் விருந்தினர்களை இம்பெரஸ் செய்யும் வகையில் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அவர்களின் படுக்கை அறை ஒரு குடோனை போல வைத்திருப்பார்கள்.. படுக்கை அறையின் ஒரு மூலையில் அவர்களின் பெட்டை போட்டு வைத்திருப்பார்கள். அந்த பெட்டுக்கு நேர் எதிரில் கண்ணாடியோடு அமைந்த டிரெஸ்றோ அல்லது கண்ணாடி பதித்த பீரோவோ இருக்கும். அது மட்டுமல்லாமல் அந்த பீரோவின் மேல் மிக்ஸி வாங்கிய பாக்ஸ் அல்லது ஏதாவது ஒரு அட்டை பெட்டியை வைத்திருப்பார்கள் மேலும் அந்த அறையில் இருக்கும் கதவின் பின்புறத்தில் சில கொக்கிகள் மாட்டில் அதில் பேண்ட் சட்டை பெல்ட் என்று ஏதாவது தொங்கி கொண்டிருக்கும். அது போல ஜன்னல்களில் எப்போதும் மூடிவைத்தது மட்டுமல்லாமல் அதில் சில திரைகள் போட்டு மூடிக் கொண்டிருக்கும் மேலும் அதே ரூமில் டேபிள் போட்டு கம்யூட்டர் வைத்திருப்பாரகள் பல புக்குகள் அடைந்திருக்கும் சிறிய டிவியும் வைத்திருப்பார்கள். மேலுல் கடவுள் போட்டு தினசரி அல்லது மாதக் காலண்டர்கள் அலங்கரிக்கும் அந்த அறையின் சுவர்களில். இப்படி இருக்கும் அறைகளில் உறங்கும் தம்பதிகளுக்கு பாஸிடிவ் உணர்வு என்பது கிடைப்பதே இல்லை என்று அடித்து கூறலாம். இப்படி பட்ட அறைகளில் நிகழும் உறவுகளிலும் எந்த வித ரொமாண்டிக் உணர்வுகளும் தோன்றுவதில்லை. வாழ்வில் வசந்தமும் வீசுவதில்லை.
உங்கள் வாழ்வில்  எல்லா நாட்களும் வசந்தமாக இருக்க நான் அறிந்த படித்த படுக்கை அறை ரகசியங்களை உங்களிடம் இங்கே பகிர்கிறேன்.இதை கடைபிடித்தால் உங்களுக்கு  பாசிடிவ் உணர்வு தோன்றுவதோடு உங்கள் வாழ்வு மற்றும் உறவு மிக இன்பமயமாகி மகிழ்ச்சி பூத்து குலுங்கும்.
சூரிய வெளிச்சம் உங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தால் உங்கள் இல்லற வாழ்க்கையிலும் வெளிச்சம் கண்டிப்பாக வரும். அதானால் பகல் நேரத்தில் உங்கள் படுக்கை அறை ஜன்னல்களை நன்கு திறந்து வைத்து சூரிய ஒளிக் கதிர்களை ஊடுருவச் செய்யுங்கள் .அந்தி சாயும் நேரத்தில் ஜன்னல்களை அடைத்துவிட்டு ஜன்னல் திரையை தொங்கவிடுங்கள். இந்த வெளிச்சம் பாஸிடிவ் சக்தியை தரும்
அடுத்தாக கவனிக்க வேண்டியது பெட் ருமிற்கான கலர். நான்  பலரது வீட்டில் பார்த்து இருக்கிறேன் லைட் மஞ்சள்(க்ரீம்) அல்லது வெள்ளை அல்லது புளு கலர் அடித்து இருப்பார்கள். அதற்கு பதிலாக ரொமண்டிக் உணர்வை தூண்டும் ரெட் அல்லது அதனை ஒட்டிய கலரை அடிக்க வேண்டும்.
அறையின் சுவர்களில் அழகிய காதல் உணர்வுகளை மிக நாகரிகமாக காட்டும் சில படங்களை மாட்டிவிடுங்கள்.
படுக்கையை ஒரு மூலையில் போடாமல் இரண்டு சுவர்களுக்கு இடையில் போட்டு இரண்டு பக்க ஒரத்திலும்  நைட் ஸ்டாண்டு வைத்து மெல்லிய வெளிச்சம் வரும் லைட்டுக்களை வையுங்கள்
பூமியில் இருந்து இயற்கையாக வரும் சக்தி நம் உடம்பில் நேரடியாக பாடாமல் இருக்கும் படி படுக்கையின் உயரம் 18 இஞ்சுகளுக்கு மேல் இருக்க வேண்டும்
படுக்கையின் ஹெட் போர்டு பலகையால் அமைந்திருக்க வேண்டும் உலோகத்தில் இருக்கும் ஹெட் போர்டை தவிர்க்க வேண்டும்
அதே சமயம் படுக்கை வாசலுக்கு நேராக  இருக்க கூடாது மற்றும் படுக்கைக்கு எதிராக முகம் பார்க்கும் கண்ணாடிகள் இருக்க கூடாது
படுக்கை அறையில் இருந்து எதிர்மறை விளைவுகளை தரும்  கம்பியூட்டர். டெலிவிஷன், உடற்பயிற்சி கருவிகள் எல்லாவற்றையும் எடுத்து மாற்று அறையில் வையுங்கள்
படுக்கையின் அடியில் கண்டதை போட்டு வைக்காதீர்கள்..அப்படி செய்தால் பாஸிடிவ் எனர்ஜி நுழைந்து நம்மை சுற்றி வருவது தடைபடும்
எதையும் அளவிற்கு அதிகமாக இருக்கும்படி செய்யாதீர்கள். உதாரணமாக ஹார்ட் ஷேப் தலையணைகள் ரொமாண்டிக்கை தூண்டும் பொருட்கள் என்று அடைத்துவிடாமல் மிக எளிமையாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்ளுங்கள் அதன் பின் உங்கள் வாழ்க்கையை பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று.
நான் சொல்லும் இந்த ரகசியங்களை பின்பற்றுவது மிக எளிதுதான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில மாற்றங்கள்தான்.
 
Top