மனிதக்குரங்கு
மனிதர்கள் குரங்குகளிலிருந்து தான் வந்தனர்
என்பது உண்மை போலும். ஏனெனில் அந்த மனிதக்குரங்குகள் மிகவும் புத்திசாலியாக
உள்ளது. மேலும் அது என்ன சொன்னாலும் விரைவில் புரிந்து கொண்டு, அதை சரியாக
செய்யும். சில சமயங்களில் இந்த மனிதக்குரங்குகளுடன் மனிதர்கள் போட்டிப்
போட்டால், இவை மனிதர்களையே தோற்கடித்துவிடும். அந்த அளவு இதன்
புத்திக்கூர்மையுடன் உள்ளது.
டால்பின்
அனைவரையும் எளிதில் தன் குணத்தால் கவருவது தான்
டால்பின். அதிலும் இவை மனிதர்களுக்கு மிகவும் பிடித்த விலங்குகளுள்,
நண்பர்கள் போன்று பழகுவதில் ஒன்றாக உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும்
பிடித்ததாகவும் இருப்பது. மேலும் இவைகளுக்கு தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை
தானாகவே எளிதில் சரிசெய்துவிடும் அளவு புத்திசாலித்தனம் உள்ளது. நிறைய
ஆய்வில் புத்திசாலியான விலங்குகளில் நாம் பேசுவதை எளிதில் புரிந்து கொண்டு
செயல்படுவதில் டால்பின் மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது.
பென்குயின்
பென்குயின்கள் ஒரு சுதந்திரப் பறவைகள். இது
விரைவில் சொல்வதைப் புரிந்து கொள்வதில் சிறந்த பறவை. இவை பார்க்க மிகவும்
அழகாக இருக்கும். மேலும் இதனிடம் எதைச் சொன்னாலும் அதை அப்படியே திருப்பிச்
சொல்லும் திறன் கொண்டது. இதனிடம் வேறு எதைச் சொல்லிக் கொடுத்தாலும்,
விரைவில் பழகிக் கொள்ளும் திறமையுடையது.
எறும்பு
எறும்புகளும் புத்திசாலித்தனத்தில் குறைந்தது
அல்ல. ஏனெனில் மனிதர்களுக்குக் கூட, எந்த ஒரு பாதையையும் சரியாக பயணிக்கத்
தெரியாது. ஆனால் இவை எப்போதும் ஒரே நேரத்தில் தனக்குரிய உணவுகளை எடுத்துச்
செல்லும் போது, மற்றவைகளுடனும் சரியாக தொடர்பு கொண்டு, நேரான பாதையையே
சரியாக கடைப்பிடித்து செல்லும். மேலும் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும்,
எளிதில் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான திறனைக் கொண்டது.
கிளி
'சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்று
சாதாரணமாக சொல்லவில்லை. ஆமாம், கிளியும் மிகவும் புத்திசாலியான ஒரு பறவை
தான். அதிலும் அவைகளுக்கு மனிதர்களைப் போலவே குரலும் உண்டு. மேலும் அவை
நாம் பேசுவதை கூர்மையாக கவனித்து, அதுவே பேசும் தன்மையும் கொண்டது. எதைச்
சொல்லிக் கொடுத்தாலும், அதை நன்கு ஞாபகம் வைத்திருக்கும்.
யானை
யானையும் ஒரு வகையில் மனிதர்களைப் போல் தான்.
அதிலும் விலங்குகளில் மிகவும் சிறந்தது என்று சொல்லலாம். மேலும் இதற்கு
நம்மாட்ல நம்பமுடியாத அளவு ஞாபக சக்தி கொண்டது. இதற்கும் மனிதர்களைப் போலவே
உணர்ச்சிகளும் உள்ளது.
நாய்
நாய்கள் வீட்டில் வளர்க்கும் ஒரு சிறந்த
புத்திசாலியான செல்லப்பிராணி. ஏனெனில் அவற்றிற்கு எதை சொல்லிக்
கொடுத்தாலும், அதை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. மேலும் அவை
மனிதர்களின் உணர்ச்சியை புரிந்து, அதற்கேற்ப நடக்கத் தெரிந்த ஒரு சிறந்த
புத்திசாலியான விலங்கு. அதிலும் இவை மிகவும் நன்றியுள்ளது.