‘City of Lights’ என்று அழைக்கப்படும் பாரிஸில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில், எத்தனை இடங்கள் உங்களுக்கு தெரியும்? பாரிஸில் அவசியம் பார்க்க வேண்டிய முக்கிய 25 இடங்களின் போட்டோக்களை தருகிறோம். ஒவ்வொன்றாக பாருங்கள், இவற்றில் எத்தனை இடங்களை தமிழ் சினிமா கனவு சீனில் காண்பித்தார்கள் என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள்.
அல்லது, அடுத்த படத்தில் நம்ம ஹீரோ பாரிஸ் வீதியில் நின்று துள்ளும்போது, பின்னணியில் உள்ள இடத்தை அடையாளம் கண்டுகொள்ளவும், அடுத்துவரும் போட்டோக்கள் உதவும்.
மூட் ஏற்படுத்தும் லைட்டிங்: இருளத் தொடங்கும் நேரத்தில், லைட் போடப்பட்ட Eiffel Tower மற்றும், Hotel des Invalides ஆகிவற்றை கீழேயுள்ள போட்டோவில் பார்த்துவிட்டு அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.



கீழேயுள்ள போட்டோவில் உள்ளது, பாரிஸ் நகரில் உள்ள Louvre மியூசியம். இதன் ஆப்பலோ கேலரியின் சீலிங்கில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளை பாருங்கள். 1661-ம் ஆண்டு கட்டமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மியூசியம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட போது, 1851-ம் ஆண்டு ஆகிவிட்டது. அதாவது சுமார் 200 ஆண்டுகளாக, குறைந்தபட்சம் 3 தலைமுறை ஆட்களால் கட்டப்பட்டது.
ஆப்பலோ கேலரியில் பிரெஞ்ச் அரச குடும்ப நகைகளும் உள்ளன. பிரபல வைரங்கள், Régent (140 கேரட்), Côte de Bretagne ruby (105 கேரட்) ஆகியவற்றையும் இங்கே பார்க்கலாம்.



கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Basilique Sacré-Coeur சர்ச். பாரிஸ் நகரின் அதி உயரமான Montmartre பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் இது. இங்கு சென்றால், தேவாலயத்தின் உச்சியில் உள்ள domeல் ஏறிப் பார்க்க தவறாதீர்கள். Montmartre மலையில் இருந்து 271 அடி உயரத்தில் உள்ளது தேவாலயத்தின் dome. பாரிஸ் நகரை உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு, Eiffel Towerக்கு அடுத்தபடியான உயரமான இடம் இதுதான்.
 

கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Magasins du Printemps டிபார்ட்மென்ட் ஸ்டோரின் உட்புறம். முழுமையாக கிளாஸால் அமைக்கப்பட்ட கிளாசிக் கூரை ஒன்றை இதைவிட அருமையாக உலகில் வேறு எங்கும் தனியார் ப்ரொப்பர்டியில் பார்க்க முடியாது! Magasins du Printemps டிபார்ட்மென்ட் ஸ்டோரின் மெயின் ரெஸ்ட்டாரென்டுக்கு மேலேயுள்ள இந்த கூரைப் பகுதி, 1923-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மொத்தம் 3,185 பீஸ் ஸ்டெயின் கிளாஸ்களால் அமைக்கப்பட்டுள்ளது.

கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Place du Trocadero பூல். மியூசியங்களும், கார்டன்களும் அமைந்துள்ள பகுதியில் உள்ள இந்த பூலில் கால்களை நனைத்தபடி பொழுதைக் களிக்க வரும் உல்லாசப் பயணிகள் ஏராளம். (குளிக்க முடியாது)


கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Seine ஆற்றில் செல்லும் Bateau Mouche டூரிஸ்ட் படகு. போட்டோ எடுக்கப்பட்ட நேரத்தில் படகு, பாரிஸ் நீதிமன்றத்தை கடந்து சென்றுகொண்டு உள்ளது. பாரிஸின் பல பகுதிகளை ரிலாக்ஸ்ட்டான முறையில் (ட்ராஃபிக் பிரச்னை இல்லாமல்) சுற்றிப் பார்ப்பதற்கு இதுவே அட்டகாசமான வழி. படகில் உள்ள அறிவிப்பாளர், ஒவ்வொரு இடம் பற்றியும் விளக்கம் கொடுக்கும் அறிவிப்புகளை செய்வார்.



கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Louvre மியூசியம். இந்த மியூசியம் பிரெஞ்ச் அரச குடும்பத்தினருக்கும், அவர்களது விருந்தினர்களுக்கும் மட்டுமே என்றுதான் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. பொதுமக்களும் பார்வையிடலாம் என திறந்துவிடப்பட்ட ஆண்டு, 1793. இது ஒரு ஆர்ட் மியூசியம். 60,000 சதுர மீட்டர் பரப்பளவில், 35,000 ஆர்ட் ஒர்க்குகள் உள்ளன. எல்லாமே மிகப்பழமையானவை.




கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Jouffroy ஷாப்பிங் பாசேஜ்வே. லோக்கல் ஆர்ட், உணவு, மற்றும் பொருட்கள் விற்கப்படும் இடம். பாரிஸ் ஞாபகார்த்தமாக ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிச் செல்ல வேண்டுமென்றால், அருமையான இடம் இதுதான். Grands Boulevards மற்றும், Louvre இடையே அமைந்துள்ள இந்த ஷாப்பிங் பாதை, ஒரிஜினலாக அமைக்கப்பட்டது எதற்கு தெரியுமா? குதிரை வண்டிகள் செல்லும்போது தெறிக்கும் சேறு, பாதசாரிகள்மீது படாமல் மறைப்பு கொடுப்பதற்காக!
 


கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Centre Pompidou காம்பிளெக்ஸ். Notre-Dame cathedralக்கு அருகே, பாரீஸின் மிகப் பழமையாக பில்டிங்குகளுக்கு நடுவேயுள்ள புதிய பில்டிங் (1977) இதுதான். இதற்கு உள்ளே பொது நூலகம், மற்றும் மார்டன் ஆர்ட் பிரெஞ்ச் நேஷனல் மியூசியம் ஆகியவை உள்ளன.


கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Notre-Dame cathedral தேவாலயம். ஒரிஜினல் பிரெஞ்ச் Gothic கட்டடக் கலைக்கு உதாரணமாக கூறப்படும் கட்டடம் இதுதான். வருடத்துக்கு 13 மில்லியன் பேர் வந்து செல்லும் தேவாலயம் இது. பிரெஞ்சில் Notre-Dame என்பதன் அர்த்தம், “Our Lady”.



கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Notre-Dame cathedral தேவாலயத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற கல் சிற்பம். தேவாலயத்தை வெளியேயிருந்து பார்த்துவிட்டு, இந்த கல் சிற்பத்தை பார்க்காது திரும்பி விடாதீர்கள். ‘இயல்பான சிற்பக் கலையின் மகுடம்’ என்று இந்த சிற்பத்தை அழைக்கிறார்கள்.


கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Jardin des Tuileries பார்க். பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டன் இது. இங்குள்ள பவுண்டன்கள், சிலைகள், கஃபேகள், எல்லாமே, டிப்பிகல் பிரெஞ்ச் டேஸ்டை கொடுக்கும். ஜாக்கிரதை, அநேக கஃபேகளில், காபியை உள்ளே அமர்ந்து குடிக்க ஒரு விலை, நின்று குடிக்க ஒரு விலை, வெளியே அமர்ந்து குடிக்க ஜாஸ்தி விலை!


கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Tuileries அரண்மனை. அரண்மனைக்கு வெளியே சம்பிரதாயமான கார்டன் பார்க் (Jardin des Tuileries), Seine ஆறுவரை நீண்டு செல்கிறது.



 கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Moulin Rouge காபரே. பாரிஸ் நகரின் ‘ரெட் லைட்’ பகுதியான Pigalleன் Boulevard de Clichyல் அமைந்துள்ளது இது. ஒரிஜினலாக கட்டப்பட்டது, 1889-ம் ஆண்டில். Moulin Rouge, இங்கு உருவான can-can டான்ஸூக்கு பிரபலமானது. அநேக டான்ஸ்கள், டாப்லெஸ் ஆக இருக்கும்.

 


கீழேயுள்ள போட்டோவில் தெரிவது, பாரிஸ் நகரில் உள்ள Fontaine des Mers சதுக்கம். 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொது சதுக்கம் இது. இதுதான், பாரிஸின் மிகப்பெரிய சதுக்கம்.



 
Top