தீபாவளி என்றாலே அனைவருக்கும் பட்டாசு தான் ஞாபகம் வரும். அதிலும் தீபாவளியன்று அதிக பட்டாசுகளை வெடிப்பதை விட, அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெருவில் நிம்மதியாக நடக்க முடியாத அளவில் பட்டாசுகளானது வெடிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த தீபாவளியன்று அனைத்து வீடுகளிலும் இனிப்புகளை மறக்காமல் செய்வர்.
ஏனெனில் தீபாவளிக்கு மேற்கொள்ளும் கேதாரகௌரி விரதத்தின் காரணமாக நிச்சயம் இனிப்புகளானது செய்யப்படும். அதிலும் பண்டிகை என்றாலே வீடுகளில் இனிப்பு இல்லாமலா இருக்கும். இவ்வளவு விஷயம் நடக்கும் இந்த தீபாவளியில், அந்த ஒரு நாள் மட்டும் முடிந்த அளவில் சந்தோஷத்தை அனுபவித்துவிட்டு, மறுநாளில் இருந்து, அந்த சந்தோஷத்தின் பலனாய் சிலர் நோய்வாய்ப்பட்டு அவஸ்த்தைப்படுவர்.

அதென்ன பிரச்சனைகன் என்று கேட்கின்றீர்களா? அது தான், உணவுக் கட்டுப்பாடு. ஆம், இத்தனை நாட்கள் நீரிழிவு இருக்கும் போது கட்டுப்பாட்டுடன் இருந்தவர்கள், இந்த நாள் வந்துவிட்டால், அந்த நோயை மறந்துவிட்டு, இனிப்புகளை அதிகம் சாப்பிட்டுவிடுவர். மேலும் சிலர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் பட்டாசுகளை பார்த்துவிட்டால், அதனை வெடிக்க ஆசைப்பட்டு, வெடிப்பர். இதனால் ஆஸ்துமா முற்றிவிடும். அதுமட்டுமின்றி, இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படாமலிருக்க, தீபாவளி ஆரோக்கியமாக இருக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

இயற்கை இனிப்புகள்

 வீட்டில் இனிப்புகளை தயாரிக்கும் போது, அதற்கு செயற்கை இனிப்புகளை பயன்படுத்தாமல், இயற்கை இனிப்புகளான வெல்லம், தேன், பேரிச்சம் பழம் அல்லது உலர்திராட்சைகளை பயன்படுத்தலாம். இது சற்று கடினமானது தான். ஆனால் ஆரோக்கியமானது. சொல்லப்போனால் இனிப்புகள் நிறைவற்றிற்கு அதுதான் சரியான சுவையைத் தரக்கூடியது.

ஆரோக்கியமான எண்ணெய்

தீபாவளியன்று அனைவரும் வீட்டில் இருப்பதால் நல்ல சுவைமிக்க சமையலை செய்து சாப்பிட தோன்றும். அதனால் அளவே இல்லாமல் சாப்பிடுவோம். ஆகவே அப்போது சாதாரணமான சமையல் எண்ணெயை பயன்படுத்துவதை விட, அவோகேடோ அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இதனால் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்கும்.

சர்க்கரை இல்லாத ஸ்வீட்

தற்போது நிறைய உடலுக்கு தீங்கை விளைவிக்கும் சர்க்கரையை சேர்க்காத இனிப்புகள் பல உள்ளன. இவை அனைத்தையும் சில சமயங்களில் வீட்டில செய்து சாப்பிட இயலாது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், கேசார் பேடா போன்ற சர்க்கரை சேர்க்காத ஸ்வீட்களை வாங்கி சாப்பிடலாம்.

காற்று மாசுபாடு

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுகளை எப்போதுமே விடக்கூடாது என்பதில்லை. ஆனால் அவ்வாறு பட்டாசு வெடிக்கும் போது, அந்த புகையை நேரடியாக சுவாசிக்கக்சுடாது. அப்போது மூக்குகளில் ஏதேனும் ஒரு துணியைக் கட்டிக் கொண்டோ அல்லது பட்டாசை வைத்தப் பின் அருகில் இல்லாமல் மிகவும் தூரமாகவோ இருப்பது நல்லது.

இரைச்சல்

தீபாவளி என்றலே பட்டாசு தான். இந்த பட்டாசு இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வீட்டில் அத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், பட்டாசை அவர்களுக்கு மிகவும் தொலைவில் வைத்து வெடிப்பது நல்லது. மேலும் இந்த பட்டாசு காது கோளாறு, அதிக இரத்த அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும்.
 
Top