தற்போதுள்ள குழந்தைகள் அனைத்திலுமே வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர். அது என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? அது தான் நமது பாரம்பரிய விளையாட்டான கால் பந்து, கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வமின்றி, வித்தியாசமான விளையாட்டுக்களை விரும்புகின்றனர். ஏனெனில் அந்த பாரம்பரிய விளையாட்டுகளில் விதிமுறைகளான இதைத் தான் செய்ய வேண்டும், இப்படி தான் செய்ய வேண்டும் என்பன போன்றவையெல்லாம் அவர்களுக்கு போர் அடித்துவிட்டது.


ஆகவே அவர்கள் உடல் மற்றும் மன வலிமையைக் காட்டும், விளையாட்டுகளான புதுப்புது சாகச விளையாட்டுக்களைத் தான் அதிகம் விரும்புகின்றனர். ஆகவே அத்தகைய விருப்பமான விளையாட்டுக்களில் அவர்களை ஈடுபடச் செய்து, அவர்களை மகிழ வையுங்கள். அந்த மாதிரியான தற்போதுள்ள குழந்தைகளுக்குப் பிடிக்கும் சாகச விளையாட்டுக்கள் என்னவென்று தெரியுமா? அதை இங்குப் பட்டியலிட்டுள்ளோம், சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பாறை ஏறுதல்

பாறை ஏறுதல் விளையாட்டால், உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமடையும். எனினும் இது பெற்றோர்களை பொறுத்த வரை ஒரு ஆபத்தான விளையாட்டு என்று தான் சொல்வார்கள். ஆகவே இதில் உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமிருந்தால், முறையான பயிற்சியாளரைக் கொண்டு, சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பார்கள். அதிலும் இதில் பெற்றோர்களுக்கு பயமாக இருந்தால், அதற்கு பதிலாக சுவற்றை ஏறச் சொல்லிக் கொடுக்கலாம்.

நீண்ட தூர பயணம்

குழந்தைகளை எங்காவது ட்ரெக்கிங் எனப்படும் நீண்ட தூர பயணமாக ஏதாவது மலைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இந்த ட்ரெக்கிங்கை 4 வயதிற்கு மேல் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதிலும் இரவு நேரத்தில் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் அழைத்துச் சென்று, இரவில் ஒரு பார்ட்டி போன்று கொண்டாடி மகிழலாம்.


ஆற்றை கடத்தல்

ஆற்றை கடப்பது என்பது குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு நல்ல செயல். அதற்கு ஆற்றின் இரு முனைகளிலும் கயிற்றை கட்டிவிட்டு, அதனைப் பிடித்து தொங்கிக் கொண்டு, கடக்கும் படியாக செய்யலாம். முக்கியமாக இதை செய்யும் முன், குழந்தைகளுக்கு அதை பிடித்து தொங்கும் அளவு சக்தி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும். வேண்டுமென்றால் இதை வீட்டிலேயே கயிற்றைக் கட்டி செய்ய வைக்கலாம்.

கயிற்றால் கீழே இறங்குதல்

சில குழந்தைகள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு இந்த ராப்பெல்லிங் எனப்படும் கயிற்றால் கீழே இறங்கும் விளையாட்டு பிடிக்கும். இதற்காகவே அட்வென்சர் கிளப் குழந்தைகளுக்காகவே, பாதுகாப்பான முறையில் இந்த விளையாட்டை அமைத்திருக்கிறது. உங்கள் குழந்தைகள் பாறை அல்லது சுவரில் ஏறுவதில் விருப்பமுள்ளவராக இருந்தால், இதில் சேர்த்துவிடுங்கள்.

பங்கீ ஜம்பிங்

இது என்னவென்றால், குஷி படத்தில் எப்படி விஜய் ஒரு பாட்டில், காலில் கயிற்றைக் கட்டி மலையில் இருந்து குதிக்கிறாரோ, அதேப் போல் குழந்தைகளின் உடலில் கயிற்றைக் கட்டி, வீட்டிலேயே உயரத்தில் இருந்து, இதை செய்ய வைக்கலாம்.
 
Top